வாங்கிய மல்லிகை பூவை கட்டி அப்படியே தலையில் வைத்துக் கொண்டால் முடிந்தது. அதை எதற்காக 15 நாட்கள் வரை ஸ்டோர் செய்ய வேண்டுமென்று ஒருசில பேர் நினைக்கலாம். சில சமயங்களில் நிறைய பூ மலிவான விலையில் கிடைத்துவிடும். கட்டி சுவாமி படங்களுக்கு வைத்துவிடுவோம். பெண்களும் தலையில் வைத்துக் கொள்வார்கள். இருப்பினும் மீதம் நிறைய பூ இருக்கும். சில பேர் இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டு தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அப்படி பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும்போது மல்லிகைப்பூ 2 நாட்களுக்குள்ளாகவே அப்படியே பழுப்பு நிறத்தில் வாடி போக ஆரம்பித்துவிடும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

15 நாட்களிலிருந்து 20 நாட்கள் வரை வாடாமல் இருக்க மல்லிகை பூவை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது எப்படி. ஃப்ரிட்ஜ் இல்லாமல் ஸ்டோர் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மல்லிகைப் பூவை மொட்டாக வாங்கிய உடனேயே ஃபேன் காற்று இல்லாமல் முதலில் கட்டிவிட வேண்டும். கட்டிய பூவை எடுத்து அழகாக சுருட்டி வாழை இலையில் வைத்து முழுமையாக மடித்து விடுங்கள். அதாவது வாழை இலையை வைத்து அப்படியே சுருட்டி மடித்து பூவை லேசாக அழுத்தம் கொடுக்காமல் பேக் செய்து கொள்ளுங்கள். இதை அப்படியே ஒரு சில்வர் டப்பாவில் வைத்து மூடி போட்டு பிரிட்ஜில் வைத்தால், 15 நாட்கள் வரை பூ மொட்டாக பிரஷ்ஷாக இருக்கும்.

பூவை ஒரு சில இடங்களில் வாழை இலையில் வைத்து சுருட்டி தான் கட்டித் தருவார்கள். இதற்கு காரணம், வாழை இலையில் சுருட்டி கொடுத்தால் பூ சீக்கிரத்தில் வடாமல் இருக்கும். இப்போதுதான் பூ கட்ட நூல் வந்து விட்டது. அந்த காலத்திலெல்லாம் பூவை வாழைநார் வைத்து தான் கட்டுவார்கள் அல்லவா. நீண்ட நேரம் பூ வாடாமல் இருக்கும் என்பதால்தான் நாரில் பூ கட்டும் பழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள். இன்னைக்கு நாம இதை மறந்தே போய் விட்டோம் அல்லவா.

உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால் என்ன செய்வது. முதலில் ஒரு வெள்ளைக் காகிதத்தில் பூவை வைத்து நன்றாக சுருட்டி பேக் செய்து கொள்ள வேண்டும். அடுத்து காட்டன் வெள்ளை நிறத்தில் இப்போதெல்லாம் கடைகளில் துணிப்பை கொடுக்கிறார்கள். அதை ஈரத்தில் நனைத்து சுத்தமாக பிழிந்து விடுங்கள். அந்த பைக்கு உள்ளே பேப்பரில் பேக் செய்த பூவை போட்டு லேசாக சுருட்டி அப்படியே சில்வர் டப்பாவில் வைத்து, மூடி போட்டு பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவதைவிட சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பூ நன்றாக இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin