காலங்காலமாக நம் முன்னோர்கள் தண்ணீரை சேமித்து வைக்க பயன்படுத்திய பாத்திரங்களில் முக்கியமானது செம்பு பாத்திரங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முதலில் தேவை குறையாத நீர்ச்சத்து தான். இதை முன்னரே உணர்ந்ததால் தான் தண்ணீர் சுவையற்ற பானமாக இருந்தாலும் அதை சத்தான பானமாக மாற்ற செம்பு நீரில் பிடித்து பயன்படுத்தினார்கள். இதனால் குடிக்கும் நீர் நிறைவான சத்தை உடலுக்கு அளித்தது. ஆயுர்வேத கூற்றுப்படி காலையில் வெறும் வயிற்றில் செப்பு பாத்திரத்தில் நிறைத்து வைத்துள்ள நீர் குடிப்பதால் உடலில் கப, பித்த, வாதம் சமநிலைப்படுவதாக தெரிவித்துள்ளது.

நமது முன்னோர்கள் ஏன் செம்பு பயன்படுத்தினார்கள் என்பதை இன்றைய நவீன ஆய்வுகளும் இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுவதில் செம்பு செயல்படுகிறது என்பதை ஓப்புக்கொண்டுள்ளது.ஏனெனில் செம்பு நீரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை கொன்று சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றி தருகிறது. குறைந்தது நான்கு மணி நெரத்தில் இத்தகைய நன்மையை நாம் பெற்றுவிட முடியும். செம்பு பாத்திரத்தில் நீரை சேர்த்து குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் உடலுக்கு தேவையான தாமிரச்சத்து எளிதாக கிடைக்க கூடும். தாமிர பாத்திரநீர் தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

செம்பு பாத்திர நீரை குடிப்பதன் மூலம் அது வயிற்றுக்குள் கேடு தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழிக்க செய்கிறது. இது வயிற்று வீக்கத்தை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வயிற்றில் உண்டாகும் புண்கள், அஜீரணம் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. வயிற்றை சுத்தம் செய்வதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துகிறது. இதனால் உடலில் இருக்கும் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேகரிக்கும் போது அதில் தாமிரத்துகள்கள் கசிந்து விடுகீறது. இதை குடிக்கும் போது உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin