புதுசா அரைத்த இட்லி மாவை அரை மணி நேரத்தில் புளிக்க வைத்து இட்லி சுடலாம். தோசையும் வார்க்கலாம். அதற்கு ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். படிச்சு பாருங்க. குறிப்புகள் உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் தேவைப்படும் போது ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களுடைய புத்திசாலித்தனத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அசந்து போவார்கள். அந்த அளவிற்கு இது ஒரு நல்ல குறிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவிற்குள் செல்வோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல இட்லி மாவை அரைத்து விட்டு உப்பு போட்டு உங்களுடைய கையை வைத்து நன்றாக கரைக்க வேண்டும். கை சூட்டில்தான் இட்லி மாவு புளிக்கும். ஆக கையைக் கொண்டு அரிசி மாவையும் உளுந்த மாவையும் கரைத்து தற்போது தேவையான மாவை மட்டும் ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள மாவை புளிப்பதற்கு முன்பு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டால் நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

இப்போது அரைத்த புதிய இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா. இதை அரைமணி நேரத்தில் புளிக்க வைக்க மூன்று வழிகள் உள்ளது. முதலாவது வழி. அரைத்த இந்த மாவின் மேல் ஒரு தட்டு போட்டு மூடி அடிக்கின்ற வெயிலில் அரை மணி நேரம் வைத்தால் சிறிய சிறிய முட்டைகள் எழும்பி மாவு புளிக்க தொடங்கி விடும். ஆனால் இதற்கு உங்களுடைய வீட்டில் நிறைய வெயில் இருக்க வேண்டும். அதேசமயம் இரவு நேரத்தில் மாவு ஆட்டினால் இந்த டிப்ஸ் வொர்க் அவுட் ஆகாது. வெயில் இருக்கிறவங்க இந்த குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.

இரண்டாவது குறிப்பு. ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்ய வேண்டும். அதாவது குக்கரில் இருந்து புகை வரும் அளவிற்கு சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த குக்கருக்கு உள்ளே மாவு பாத்திரத்தை வைத்து, குக்கருக்கு மேலே மூடி போட்டு விசிலும் போட வேண்டும். உள்ளே இருக்கும் காற்று வெளியில் போகாமல் இருக்கத்தான் விசில். (ஞாபகமாக அடுப்பை அணைத்துவிட்டு இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.)

By admin