காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம். இந்த இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பீட் ரூட் நன்கு துருவி எடுத்துக்கொள்ளவேண்டும். அதனை பிழிந்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசியை நன்கு களைந்து தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு பருத்தி துணியில் இந்த அரிசியை போட்டு மின்விசிறி காற்றில் உலர வைக்க வேண்டும். பிறகு இந்த அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மாவை கடாயில் கொட்டி, அடுப்பில் வைத்து இதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும்.

வறுக்கும் போது மாவை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டால் மாவு தீய்ந்து விடும். மாவின் தூள்கள் வெளியே தெரித்தால் மாவில் உள்ள ஈரப்பதம் நீங்கி விட்டது என அர்த்தம். பிறகு வேறொரு பாத்திரத்தில் அந்த மாவை கொட்டி, நன்றாக ஆறவிட்டு, பிறகு சல்லடையில் அந்த மாவை கொட்டி நன்கு சலித்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

இப்படி மாவை தயார் செய்து கொண்ட பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் இந்த இடியாப்ப மாவை போட்டு கலந்து, தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின்பு பிசைந்த அந்த மாவை முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் மாவை பிழிந்து கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் இருக்கும் இட்லி குண்டவாவின் மூடியை திறந்து, அதில் மாவு பிழியப்பட்ட இட்லி தட்டுகளை வைத்து மூடி, 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தோமேயானால் சுவையான இடியாப்பம் தயார். இதை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னி அல்லது வேறு ஏதேனும் சட்னி, குழம்பு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin