நாம் உபயோகிக்கும் தோசைக்கல் புதிதாக வாங்கும் பொழுது ஒரு கரண்டி மாவை ஊற்றி அந்த தோசைக்கல் இருக்கும் அளவிற்கு பெரியதாக தோசை சுட முடியும். ஆனால் நாளடைவில் அதில் எண்ணெய் பிசுக்கு சேர்ந்து போய் தோசை சிறியதாக சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். பெரிய அளவில் தோசை சுடுவதற்கு இது போல் ஓரங்களில் இருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை எளிய முறையில் நீக்கி விட வேண்டும். அதை எப்படி நீக்குவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தோசைக்கல்லில் வினிகர், பேக்கிங் சோடா போன்ற எந்த விதமான பொருட்களையும் நாம் உபயோகிக்க தேவையில்லை. வெறும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு வைத்து தோசைக்கல்லில் இருக்கும் அதிக எண்ணெய் பிசுக்கை நீக்கி புதியதாக வாங்கிய தோசை கல் போல் மாற்றி விட முடியும்.

எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலம் எண்ணெய் பிசுக்கை எளிதாக நீக்கி விடக்கூடிய தன்மை கொண்டுள்ளது. கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் அரை மூடி இருந்தாலே போதும் தோசைக்கல்லை சூப்பராக புதியது போல் செய்து விடலாம். தோசைக்கல்லில் நாளடைவில் ஓரங்களில் படியும் எண்ணெய் பிசுக்கு அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். தோசை சுடும் பொழுது அந்த இடத்தில் இருக்கும் மாவு சரியாக வேக முடியாமல் தோசை பிய்ந்து போய் விடும்.

இதற்கு உங்களுடைய தோசைக்கல்லை அடுப்பின் மேல் வைத்து அடுப்பை லோ ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாக சூடேறியதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பு எடுத்து போட்டு கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சை பழத்தை ஒரு ஸ்பூன் பயன்படுத்தி பின் பக்கமாக குத்திக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனை பிடித்து எலுமிச்சையை கல் உப்பின் மீது நன்கு தேய்க்க வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin