பெயருக்கேற்றாற் போன்று இவை ஓரிதழை கொண்டிருக்கும் தாமரை. அதோடு இவை தாமரையை போல் நீரில் வளர்வதில்லை. நிலத்தில் வளர்கிறது. சிறிய செடியாக வளரக்கூடிய இதனுடைய பூ சிவப்பாக இருக்கும் நடுவில் நாமம் போன்று இருக்கும். ஓரிதழ் தாமரை செடியின் காய் ஒற்றைக்கல் மூக்குத்தியை நினைவுப்படுத்தும். பொதுவாக வயல்வெளிகளிலும், தோட்டங்களிலும். இதை பரவலாக காணலாம். இந்த செடியின் பூ, இலை, தண்டு, வேர், காய் என முழுவதுமே மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக இழந்த ஆண்மையை மீட்டெடுக்கும் வல்லமை கொண்ட இது இந்தியாவின் வயாகரா என்ற பெயரை பெற்றுள்ளது. ஆண்களுக்கு எப்படி இது உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் அனைத்தையும் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து கொள்ளவும். சலித்து பயன்படுத்தவேண்டும். இது ஓரிதழ் தாமரை சமூலம் அல்லது ஓரிதழ் தாமரை சூரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பொடியை தயாரித்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளவும். நாட்டு மருந்து கடைகளிலும் இவை கிடைக்கிறது. இவை அதிக வழவழப்புத்தன்மையை கொண்டிருக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு பிறகு ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் அளவு 48 நாட்கள் எடுத்துகொண்டால் இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம். இதை காயகல்பமாகவும் தயாரித்து பயன்படுத்தலாம். இது குறித்து தனியாக பார்க்கலாம்.

விந்தணுக்கள் குறைபாட்டினால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துவருகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாடு, விந்தணுக்களின் வீரியம் குறைவது, ஆயுள் குறைவது என்று பல பிரச்சனைகள் இன்றைய ஆண்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin