தன்னம்பிக்கை இல்லாத மனிதன் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. அவ்வாறு ஒருவரருக்கு தன் மீது என்னதான் தன்னம்பிக்கை இருந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கையும் இருக்க வேண்டும். மனித சக்தியுடன் இறை சக்தியும் இருக்கும் போதுதான் நமது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். அவ்வாறு வீட்டில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி தேவியின் அருள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருக்க வேண்டும். அவ்வாறு லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்காக பெண்கள் தங்களின் வீடுகளில் பல வித பூஜை செய்து வருகிறார்கள். அவ்வாறு நாம் பயன்படுத்தக்கூடிய அஞ்சறைப் பெட்டியின் வாயிலாகவும் மகாலட்சுமியின் அருளைப் பெற்று நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படக் கூடிய சிறுசிறு பொருட்களில் மகாலட்சுமியின் வாதம் இருப்பதாக நாம் அனைவரும் அறிந்ததே அவ்வாறு சில பொருட்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை நம்மிடம் இருக்க முடியும் இவ்வாறு பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டிய சில பொருட்களும் இருக்கின்றன. பணப்பெட்டியில் பெருமாளின் கோவிலில் இருந்து வாங்கி வந்த துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் இது போன்ற பொருட்களை வைக்க வேண்டும். இவற்றை வைப்பதன் மூலமாக இவை நேர் மறை சக்திகளை ஈர்த்து பணத்தை பன்மடங்காக பெருகி கொடுக்கின்றன. அவ்வாறு ஒரு வீட்டின் நிதி நிலைமையை அதிகரிக்கக் கூடிய ஒரு விஷயம் நமது வீட்டில் அஞ்சறைப் பெட்டி ஆகும்.

இந்தப் பெட்டியை மிகவும் கவனமாக கையாள வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களை வைக்கும் ஒரு பொருள் என்று அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நமது முன்னோர்கள் இந்த அஞ்சறை பெட்டியயின் அற்புதத்தை பற்றி தங்கள் தலைமுறையினருக்கு விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஒரு சிலர் அதனை இன்று வரையிலும் சரியாக கடைபிடித்து வருகிறார்கள். அவ்வாறு அஞ்சறைப்பெட்டி எப்பொழுதும் முழுவதுமாக நிரம்பி இருக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியை புதியதாக வாங்கி நிரப்பவேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை தினத்தில் அதனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது போல அஞ்சறைப் பெட்டியின் நடுவில் 11 ரூபாய் காசு மற்றும் அதன் மீது 4 ஏலக்காய், 4 கிராம்பு வைத்து விடவேண்டும். இவற்றை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. இவை நேர் மறை சக்திகளை தன்னிடம் ஈர்த்து நமது வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

அதுபோல அஞ்சறைப்பெட்டியில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் எந்தவித பொருட்களையும் வைத்துவிடக் கூடாது. அவ்வாறு மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து குறிப்புகளை இவற்றில் வைத்து விட்டால் நமது மருத்துவச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அது போல சனி பகவானுக்கு உரிய எள்ளை இதில் போட்டு வைக்கக்கூடாது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். மற்றும் கல்லுப்பு, தூள் உப்பு இவை இரண்டையும் அஞ்சறை பெட்டியில் வைக்கக் கூடாது. உப்பு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் திறன் படைத்தது. எனவே இவ்வாறு செய்வது குடும்பத்தின் நிதி நிலைமையை பாதிக்கும்.

By admin