நம்முடைய வீட்டில் பணத்துக்கு பற்றாக்குறை இல்லாமல் நம்முடைய தேவைக்கு ஏற்ப வருமானம் இருந்தாலே போதும். சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். குறிப்பாக இந்த கடன் தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். வரக்கூடிய வருமானத்தில் தடைகள் இருந்தாலும் சரி, கடன் பிரச்சனையால் நீங்கள் அவதிப்பட்டு வந்தாலும் சரி, உங்களுடைய பணப்பெட்டியில் அரச இலையோடு இந்த பொருளை மட்டும் சேர்த்து வைத்துப் பாருங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்களை அரச வாழ்வு தேடி வரும். உங்களுக்கு நிறைய கடன் இருந்தால் அந்தக் கடனை அடைப்பதற்கான வழியும் உங்களுக்கு 7 நாட்களில் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. ஏழு நாட்களில் இந்த பரிகாரத்தின் பலனை நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்தால். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிகாரம் செய்வதற்கு ஒரு அரசை இலை நமக்கு தேவை. எங்கிருக்கும் அரச மரத்திலிருந்து அரச இலையை எடுத்து வரக்கூடாது. அதாவது நிறைய பாழடைந்த இடங்களில் கூட அரச மரம் வளர்ந்து இருக்கும். அந்த அரச இலைகள் நமக்கு வேண்டாம். கோவில்களில் இருக்கக்கூடிய, விநாயகர் இருக்கக்கூடிய அரச இலை நமக்கு கிடைத்தால் தான், பரிகாரத்தின் மூலம் நம்மால் முழு பலனை அடைய முடியும். இப்படி ஒரு தெய்வ கடாட்சம் நிறைந்த இடத்தில் இருந்து அரச இலையைப் பறித்து எடுத்து வாருங்கள்.

அடுத்து மயிலிறகு. மயிலிறகு எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை. காசு கொடுத்து கடையிலிருந்து கூட ஒரு மயில் இறகை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரச இலைக்கு நடுவே இந்த மயில் இறகை வைத்து, மயிலிறகு மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயம் என்பது ஹோமத்தில் போட்ட நாணயமாக இருந்தால் மிகவும் சிறப்பு. ஹோமத்தில் போட்ட நாணயம் உங்களிடம் இல்லை என்றால் சாதாரண ஒரு ரூபாயை வைத்து இந்த மூன்று பொருளையும் அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

அரசியலை, அரச இலையின் மேல் மயிலிறகு, மயிலிறகின் மேல் ஒரு ரூபாய் நாணயம். அரச இலை சில நாட்களிலேயே காய்ந்துவிடும். காய்ந்த அரச இலையை மட்டும் எடுத்துவிட்டு புதிய அரசை இலையை அந்த இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி 11 முறை அரச இலையை மாற்றிக் கொண்டே வாருங்கள். வாடிய அரச இலைகளை தூக்கிப் போடக் கூடாது. ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டு அரச இலையை சேமித்து வாருங்கள். (7 முறை இந்த அரசு இலைகளை மாற்றும் போது உங்களுடைய கடன் பிரச்சினைக்கு ஏதாவது ஒருவகையில் தீர்வு கிடைத்திருக்கும்.)

By admin