கிருஷ்ண ஜெயந்தி அன்று இத செய்து பாருங்கள். இன்னும் கொஞ்ச நாளில் கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பார்கள். அதில் பொரியுருண்டை, வடை, மாவிளக்கு, அப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பலகாரம் செய்ய நினைத்தால், நெய் அப்பம் செய்யுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியைக் கொண்டது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நெய் அப்பம் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முதலில் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவலை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவி, மிக்ஸர் ஜாரில் போட்டு, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி விட வேண்டும். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். எனவே அரைக்கும் போது அதிக நீரை சேர்த்து விடாதீர்கள். பிறகு அரைத்த மாவை குறைந்தது 7 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் அப்பம் நன்கு மென்மையாக இருக்கும். பின் அந்த மாவில் சமையல் சோடா சேர்த்து கிளறி, 10 நிமிடம் அப்படியே வையுங்கள்.

அதன் பின்பு பணியார கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடேற்றுங்கள். பின் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, தீயைக் குறைத்து, மூடி வைத்து வேக வையுங்கள். 2-3 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அப்பத்தை திருப்பிப் போடுங்கள். அப்பம் நன்கு வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு ஸ்பூனின் பின்புறத்தைக் கொண்டு குத்திப் பாருங்கள். மாவானது ஸ்பூனில் ஒட்டாமல் இருந்தால், அப்பம் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்போது சுவையான நெய் அப்பம் தயார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin