வீட்டில் தான் எலி தொல்லை என்றால் நமது தோட்டத்திலும் இந்த எலி தொல்லை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். நாமும் என்ன என்னமோ செய்து பார்ப்போம். ஆனால் எலித்தொல்லை மட்டும் தீரவே தீராது. அதை எப்படி விரட்டுவது என்று மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு! ரொம்ப ரொம்ப ஈஸியா எலியை ஓட ஓட விரட்டலாம். அதுக்கு என்ன எல்லாம் பண்ணனும்? அப்படின்னு இந்த பதிவின் மூலம் இப்போ பார்த்திடலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் மூஞ்செலி, சின்ன எலி, பெருச்சாளி என்று எந்த வகையான எலியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க ஓடியே போயிடும். எலிக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு வாசனை என்றால் அது புதினா வாசம். தோட்டத்தில் இருக்கும் எலிகளுக்கு புதினாவின் வாசத்தை வரவழைத்தால் போதும். ஒரு எலி கூட அந்த பக்கம் சுத்தாது.

புதினாவை நடவு செய்வது மிகவும் சுலபம். ஒரு சின்ன தொட்டியில் மண்ணை போட்டு வீட்டுக்கு வாங்கிய புதினா இலையில் இருந்து சில காம்புகளை மட்டும் எடுத்து வந்து நேராக நட்டு வச்சா போதும். கொஞ்ச நாளிலேயே துளிர்த்து புதினா இலைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். அந்தத் தொட்டியை தோட்டத்தில் கொண்டு போய் வைத்தாலே போதும். எலிகள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடும்.

நீங்கள் எலி பிடிப்பான் வைத்தாலும் அதில் எல்லா எலிகளும் சரியாக மாட்டுவது கிடையாது. அதன் அளவுகளுக்கு ஏற்ப எலி தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எலி தொல்லை நிரந்தரமாக ஒழிய தக்காளி பழத்தில் எருக்கம் பாலை ஊற்றி வைத்துவிட்டால் போதும். இதையும் குழந்தைகளிடமிருந்து கண்டிப்பாக எச்சரிக்கையாக தள்ளி வைக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எருக்கம் பால் விஷத்தன்மை கொண்டது எனவே சிறு குழந்தைகளின் கைகளில் எட்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin