பொதுவாகவே சாதாரண பாலில் கூட எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பாலில் இருக்கும் ப்ரோட்டீன், கால்சியம் நம்முடைய எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடியவை. தினமும் பால் குடிப்பவர்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக பெண்கள் பாலை தவிர்த்து விடக்கூடாது. பாலும், பால் சார்ந்த பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய சேவையை புரிகின்றது. அத்தகைய பாலில் இந்த 1 பொருளை சேர்ப்பதால் வியக்க வைக்கும் அளவிற்கு நம் உடலில் பிரச்சனைகள் தீர்கின்றன. அது என்ன பொருள்? அதனுடைய பயன்கள் தான் என்ன? இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன. சாதாரண பூண்டை விட, பாலில் கொதிக்க வைத்து, வேக வைத்து சாப்பிடும் பூண்டானது பல உடல் பிரச்சனைகளை தீர்க்கிறது. நன்கு கொதிக்க வைத்த பாலில் பூண்டு பற்களை தேவையான அளவிற்கு சேர்த்து வேக வைக்க வேண்டும். பூண்டு வெந்ததும் அதனோடு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்தப் பாலுக்கு சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்ப்பது மிகவும் நல்லது.

இவைகள் கொதித்து வந்ததும் பூண்டை மசித்துவிட வேண்டும். இப்போது நமக்கு தேவையான ‘பூண்டு பால்’ தயாராகிவிட்டது. இந்த பூண்டு பாலில் இருக்கும் நன்மைகளை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இந்தப் பூண்டுப் பாலை குடிப்பதால் சளித் தேக்கம் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக நிவாரணம் பெறலாம்.

இந்த பாலை குடிப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனைகள் வரவே வராது. இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும். பூண்டு கலந்த பாலில் ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin