புதிதாக வாங்கி வந்த ரோஜா செடி ஏற்கனவே அதில் இருந்த பூக்களை தவிர புதிதாக எந்த மொட்டுக்களும் சில சமயங்களில் விடாமல் இருக்கும். அதற்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததே மொட்டுக்கள் இல்லாமைக்கு காரணமாக இருக்கும். புதிதாக வாங்கி வந்த ரோஜா செடியில் அதிக மொட்டுக்கள் வருவதற்கு இதை விட சிறந்த பொருள் இருக்கவே முடியாது என்று கூறலாம். நீங்கள் ரோஜா செடி வைக்க பயன்படுத்திய மண் வளமாக இல்லாமல் இருந்தால் செடி, மொட்டுக்கள் விடுவதில் பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஜா செடிகள் மொட்டுக்கள் அதிகமாக விடுவதற்கு பொதுவாக தினமும் நாம் பயன்படுத்தி தூக்கி எரியும் டீ தூள் போடுவது வழக்கமாக இருக்கும். பாலில் சேர்க்கப்படும் இந்த டீ தூளில், சர்க்கரையும் சேர்ந்து இருக்கும். எனவே அதை விட நீங்கள் நேரடியாக டீத்தூளை பிரஷ்ஷாக போட்டு பாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவிற்கு உங்களுடைய செடிக்கு பயன்படுத்தாத தேயிலைத் தூளை வேர் பகுதியில் போட வேண்டும். செடிகளுக்கு அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அவ்வபோது தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து விட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது தேயிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ரோஜா செடிக்கு கிடைத்து விரைவாகவே பூத்துக் குலுங்க துவங்கும். ஒரு கிளையில் 2, 3 மொட்டுகள் வரை விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எல்லாக் கிளைகளிலும் மொட்டுக்கள் விட்டு உங்கள் செடி கொத்துக் கொத்தாக சில நாட்களிலேயே பூக்க ஆரம்பிக்கும். ரோஜா செடிக்கு தேவையான உரம் கொடுத்த பிறகு, நீங்கள் பாலில் பயன்படுத்தும் தேயிலையையே சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் மொட்டுக்களே விடாத ரோஜா செடிக்கு பாலில் சேர்க்கப்படாத புதிய தேயிலைத்தூள் மிகவும் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். அதே போல் இந்த ஒரு வழிமுறையையும் பயன்படுத்தி ரோஜா செடியை நன்கு வளர செய்ய முடியும். அது என்ன? என்பதையும் பார்ப்போம். பொதுவாக இட்லி தோசை மாவு அரைக்க உளுந்து தேவைப்படும். நாம் பயன்படுத்தும் உளுந்து, கருப்பு உளுந்தாக இருந்தால் மிகவும் நல்லது. கருப்பு உளுந்து பயன்படுத்துபவர்கள் உளுந்து அரைக்க ஊற வைத்த அந்த தண்ணீரில் மேலே மிதக்கும் கருப்பு உளுந்து உடைய தோல் மற்றும் தண்ணீர் சேர்த்து ரோஜா செடிகளுக்கு ஊற்றி வந்தால் மடமடவென அதிக பூக்களை பெரிது பெரிதாக உங்களுக்கு கொடுக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin