இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது. இல்லத்தரசிகள் வீட்டை சுத்தம் செய்ய தொடங்கி இருப்பீர்கள். உங்களுடைய வீட்டை, உங்கள் வீட்டு சமையல் அறையை, சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு அடிப்படையாக வெறும் 2 பொருட்கள் இருந்தாலே போதும். அந்த பொருட்களை வைத்து நம்முடைய வீட்டை சுலபமாக, சுத்தம் செய்துவிட முடியும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முதலில் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் டைல்ஸ், மேடை, கபோர்டு இப்படிப்பட்ட மற்ற இடங்களை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய 1 கப் தண்ணீர், 1 கப் வினிகர், 1 கப் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், (எண்ணெய் பிசுக்கு போவதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் விம் லிக்விட் அல்லது ப்ரில் இப்படியாக எந்த லிக்விடை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

அதாவது மேல் சொல்லப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை வைத்து உங்கள் சமையலறையில் சுவரில் உள்ள டைல்ஸ், கபோர்டு எல்லா இடங்களிலும் ஸ்ப்ரே செய்துவிட்டு, ஐந்து நிமிடங்கள் வரை ஊற விட்டு, அதன் பின்பு ஒரு துணியை வைத்து துடைத்தால் போதும். எண்ணெய் பிசுக்கு சுத்தமாக நீங்கி விடும். இதே மெத்தட் யூஸ் பண்ணி உங்க ஸ்டவ்வையும் சுத்தம் செய்து கொள்ளலாம். உடனே காய்ந்த காட்டன் துணியை வைத்து எல்லா இடங்களையும் ஈரப்பதம் இல்லாத அளவிற்கு துடைத்து விடவும். எண்ணெய் பிசுக்கு போக இந்த லிக்விட் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

உங்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல் கண்ணாடி அல்லது பால்கனியில் இருக்கும் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி இப்படியாக எல்லா வகையான கண்ணாடிகளையும் பலபல வென சுத்தம் செய்ய, 2 டம்ளர் அளவு தண்ணீருடன், 1 டம்ளர் அளவு வினிகரை கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இந்த லிக்விடை கண்ணாடியில் ஸ்ப்ரே செய்து, லேசாக துடைத்து எடுத்தால் கண்ணாடியில் இருக்கும் அழுக்கு நீங்கி பளபளக்க தொடங்கிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin