பெண்கள் என்னதான் வீட்டுக்கு ராணியாக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் அவர்களுக்கும் சவாலாகத்தான் இருக்கும். அவ்வாறு அன்றாட வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சில விஷயங்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனுள்ள மிகவும் எளிமையான குறிப்புகளை பற்றிதான் தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். உங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிரச்சனைகளை உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ள மேலும் தொடருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளை செய்வதிலேயே பெண்களுக்கு நேரம் அதிகமாக செலவாகும். அவர்களுக்கென்று தனிப்பட்ட நேரம் எதுவும் கிடைப்பதில்லை. அப்படி அவர்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வேலையை செய்ய தொடங்கிவிடுவார்கள். இவ்வாறு தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை சிறிதளவு வீணாக்காமல் ஏதேனும் வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்காக நேரத்தை மிச்சப்படுத்தி வீட்டில் இருக்கும் கடினமான வேலைகளை எவ்வாறு சுலபமாக செய்து முடிக்க வேண்டும். என்பதற்கான ஆறு குறிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதனை சரிசெய்ய நீங்கள் பயன்படுத்திய பழைய டூத்ப்ரஷ்ஷை நெருப்பில் காட்டி, உருகும் திரவத்தை, ஓட்டையின் மீது படிய செய்தால் ஓட்டை அடைந்து விடும்.

நாம் எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட் மற்றும் மக் இவற்றில் படிந்திருக்கும் விடாப்பிடியான உப்பு கரைகளை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். இது போன்ற விடாப்பிடியான கரைகளை எளிதில் சுத்தம் செய்ய புளித்த தயிருடன் 2 ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து ஒன்றாக கலந்து அதனை ஒரு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி லேசாக தொட்டு பக்கெட் மற்றும் மக்கை தேய்த்துவிட்டு 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் கழுவினால் கரைகள் அனைத்தும் சுத்தமாகி பக்கெட் மற்றும் மக் பளிச்சென்று மாறிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin