“அத்தி பூத்தாற் போல” என்கிற பழமொழியை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, அத்திப் பூ பூப்பது மிக அரிதானதாக இருப்பதால் இந்த வாய்மொழி வார்த்தை காலம்காலமாக வந்துள்ளது. மருத்துவ குணம் நிறைந்த பழங்களின் ஒன்று அத்தி. இன்று வரை அத்திப்பழத்தை பற்றிய பல ஆய்வுகள் உலக நாடுகளில் நடந்து வருகிறது. இதன் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக இதுவரை செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், பலவித ஆரோக்கிய குணங்கள் இதில் உள்ளதாம். அத்திப்பழத்தில் இருக்க கூடிய பல்வேறு மருத்துவ குணங்களும் அத்தியின் இலைகளிலும் உள்ளது. இதன் இலை உடல் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோய் வரை தீர்வுக்கு கொண்டு வரும். இதனை டீ தயாரித்து குடித்தால் எல்லா வித நலன்களும் உங்களுக்கு கிடைக்குமாம். இனி அத்தி இலையின் மகிமைகளை நாம் தெரிந்து கொள்வோம். எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் உங்களின் பழக்கமாக இருந்தால் அதை எளிதில் குறைக்கும் தன்மை அத்தி இலையில் நிறைந்துள்ளது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் அத்தி இலை உதவுகிறது. காரணம் இதிலுள்ள பொட்டாசியம் என ஆய்வுகள் சொல்கின்றன.

அத்தி பழத்தை போன்றே அத்தி இலையிலும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனை பயன்படுத்தி உடல் எடை, தொப்பை போன்றவற்றை குறைத்து விடலாம். அத்தி இலையை டீயாக தயாரித்து குடித்தால் இதற்கு தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

எலும்புகள் தேய்மானம் அடைந்தால் அதை தடுக்க புது வித மருத்துவ முறை உள்ளது. அத்தி இலையை பயன்படுத்தி எளிதாக எலும்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவிட இயலும். மேலும், எவ்வளவு வயதானாலும் எலும்புகள் அதிக உறுதியுடன் இருக்க இது உதவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin