நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் கிராமப்புறங்களில் பல வகை கீரைகள் விளைகின்றன அதில் ஒன்றுதான் பிண்ணாக்குக் கீரை பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

நமது வீடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள், புதர்களில் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விடம் பரவாமல் தடுக்கவும் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும்.

பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள். இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி உண்ண வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin