இதை இவ்வளவு ஈசியா செய்யலாம் தெரிஞ்சிருந்தா!! அதிக விலை கொடுத்து நம்ம கடையில வாங்க தேவையே இல்லையே!!

வணக்கம் நண்பர்களே நாம் குழந்தைகள் கேட்கும் சிலவற்றை கடையில் வாங்கி தருவதால் குழந்தைகளுக்கு பல்வேறு தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது எனவே அதிக பட்சம் நம்மால் முடிந்ததை நாமே செய்து குழந்தைகளுக்கு அளிப்பது சுகாதாரமானது அவசியமும் கூட எனவே இப்பொழுது உங்களுக்கு நான் புட்டு மேக்கரில் செய்யும் புட்டை நாமே வீட்டில் உள்ள பாத்திரத்தை வைத்தே செய்ய முடியும் வாங்க பார்க்கலாம் முதலில் தேவைக்கு ஏற்ப ராகி மாவை சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ள வேண்டும் அதன் பின் அதில் சிறிதளவு உப்பைக் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும் அதிகம் தண்ணீர் விடாமல் சிறிதளவு தண்ணீர் விட்டு விட்டு பிசைந்து கொள்ளவேண்டும்.

பிசைவது ரொம்ப இறுக்கமாக இருக்கக்கூடாது உதிரியாக இருப்பது நல்லது அதன் பின்பு வீட்டில் உள்ள ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளவும் அரை கப் தேங்காய் மூடியை துருவி வைத்துக் கொள்ளவும் உதரியாக இருப்பது மிகவும் நல்லது எடுத்துக்கொண்ட டம்ளரில் முதலில் ராகி மாவை போடவும் அதன்மீது துருவி வைத்த தேங்காயை ஒரு லேயர் போடவும் ஒன்றன்பின் ஒன்றாக டம்பளரின் இறுதி வரை மாற்றி மாற்றி சேர்த்துக்கொள்ளவேண்டும் அதை நன்கு அழுத்தி அழுத்தி அழுத்தமாக பின்பு நெய் தடவிய ஒரு தட்டை எடுத்துக்கொண்டு அதில் அந்த டம்ளரில் போட்ட மாவு மற்றும் தேங்காய் கலவையை தலைகீழாக வைத்து மெதுவாக எடுக்க வேண்டும்.

அதை வீட்டில் உள்ள குக்கரிலோ அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் கலந்து அதன் மீது ஒரு தட்டில் வைத்து அதன் மேல் இந்த தட்டை புட்டுடன் வைத்து 5 அல்லது 6 நிமிடம் வேக வைத்தால் போதும். உங்களுக்கு சர்க்கரை தேவை என்றால் மாவுடன் சர்க்கரை கலந்து கொள்ளலாம் அல்லது குழந்தைகளுக்கு தரும் பொழுது அதில் நாட்டுச் சர்க்கரை கலப்பது மிகவும் நல்லது எனவே நாட்டு சர்க்கரையை சமைக்கும் முன்பு சேர்க்காமல் சமைத்து முடித்த பின்பு நாட்டுச் சர்க்கரையை தூவி குழந்தைகளிடம் கொடுத்தால் ருசி நன்றாகவே இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தேவைப்படும் பொருட்கள் ராகி மாவு சல்லடையில் சலித்து அரை கப் துருவிய தேங்காய் தேவையான அளவு நெய் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை இதை மட்டுமே வைத்து நாம் எளிதில் இந்த உணவை தயாரித்து விடலாம் இது சுகாதாரமானது கூட இதை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் காலையோ அல்லது மாலையோ அருந்தி வரலாம் இதுபோன்று பல உணவுகளை நாம் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும் எங்கள் இணையத்தை பக்கத்தை தொடர்ந்து வந்தால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் இதே போன்று பல அருமையான சுவையான சுகாதாரமான உணவுகளை எப்படி சமைக்கவேண்டும் என்பதை நாங்கள் இங்கே பகிரவும் நன்றி வணக்கம்.