மழைக்காலம் என்பதால் இப்போது வீடுகளில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். மழைக் காலம் முடிந்து கோடை காலம் வரும் வரை இந்த கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இவற்றை விரட்டுவதற்காக கடைகளில் வாங்கி பயன்படுத்தும் கொசுவிரட்டிகளினால் சிலருக்கு அலர்ஜி, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றை தினமும் பயன்படுத்துவதற்கென கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இவற்றை தவிர்க்க வீட்டிலேயே சில குறிப்புகளை மேற்கொண்டால் கொசுவினை அடியோடு விரட்டிவிடலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஐந்து சிறிய துண்டு கற்பூரம் சேர்த்து, அவற்றுடன் ஐந்து கிராம்புகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்த கலவையினை உங்கள் வீட்டில் கொசு அதிகமாக வரும் இடங்களில் ஆங்காங்கே வைத்து விடவேண்டும். இதில் உள்ள கலவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஊறும்பொழுது அதிலிருந்து ஒரு நல்ல மனம் வர ஆரம்பிக்கும். இந்த வாசனை கொசுக்களுக்கு பிடிக்காத நறுமணத்தைக் கொடுப்பதால் வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் இருக்கும்.

நான்கு அல்லது ஐந்து கொத்து வேப்பிலையை எடுத்து, அதனை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கால் லிட்டர் தேங்காய் எண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் சிறிது சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள வேப்பிலையை சேர்த்து, நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த எண்ணெய் ஆறியவுடன் அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, அதில் இந்த வேப்ப எண்ணையை ஊற்றி, திரிபோட்டு, தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும்.

ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி, அதில் இரண்டு பிரியாணி இலைகளை பொடி செய்து போட்டுவிட்டு, அதன்பின் திரி போட்டு தீபம் ஏற்றினால் அதிலிருந்து வரும் இந்த பிரியாணி இலையின் வாசனைக்கு கொசுக்கள் இறந்துவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin