உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கா? இதைத் தான் மருத்துவ ரீதியில் அலோபீசியா என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த பாதிப்பில் தலையில் மட்டும் முடி உதிர்வதோடு உடம்பில் இருக்கும் முடி களும் விழத் தொடங்கி விடுமாம்.தலையில் இருந்து முடி கொத்து கொத்தாக கொட்டி வட்ட வடிவில் திட்டுகள் உருவாக ஆரம்பித்து விடும். பெரியவர்களை பொறுத்த வரையில் தலையில் உள்ள 10 லட்சம் – 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 – 100 முடிகள் வரை இழக்கிறார்கள். இந்த அளவு இயல்பானது தான். இதற்கும் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும் போது தான் நாம் மருத்துவரை காண வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5% பேர்கள் அலோபீசியாவால் பாதிப்படைகின்றனர். இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முடி உதிர்ந்த உடன் வளரத் தொடங்கி விடும். நோய்கள், மருந்துகள், மரபணுக்கள் போன்றவை கூட முடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் சாதாரணமாக சீப்பைக் கொண்டு இழுக்கும் போதே முடி உதிர்தல் ஏற்படுகிறது. 100 முடிகள் ஒரு நாளைக்கு விழுந்தால் கூட அதை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. காரணம் அவை மீண்டும் வளர்ந்து விடுகிறது. முடி உதிர்தலும் வளர்ச்சியும் சமநிலையில் இருந்தால் பிரச்சனை ஏற்படாது. ஆனால் முடி உதிர்தல் அதிகமானால் பிரச்சனை தான். அப்படி முடி உதிர்தலுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் தான் காரணமாக அமைகின்றன.

முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்றவை பரம்பரையால் ஏற்படலாம். கருவுறும் போது, மாதவிடாய் காலத்தில் மற்றும் பிரசவத்தின் போது, தைராய்டு பிரச்சனை ஏற்படும் போது உண்டாகும் ஹார்மோன் மாற்றத்தால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. மன அழுத்த மருந்துகள், கீழ்வாத மருந்துகள், ஆர்த்ரிட்ஸ் மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

கேன்சரை குணப்படுத்த கீமோதெரபி மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது முடி உதிர்தல் ஏற்படுகிறது. இறுக்கமான ஹேர் ஸ்டைல் மற்றும் கெமிக்கல்கள் கலந்த ஹேர் கலரிங் பொருட்களை பயன்படுத்தும் போது முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin