கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் ந்னமை செய்யும் ஒரு தாவரம். இது கசக்கும் என்று நாம் சாப்பிட மறுக்கிறோம். அதை கசப்பில்லாமல் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த செடி இன்று ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் இந்த செடி எந்த ஒரு பெரிய கஷ்டமும் கொடுக்காமல் எளிது வளரக் கூடியது. இதனை பராமரிப்பது மிகவும் எளிது. இந்த செடிக்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. “அழிவில்லாத ஒரு செடி” என்று இதனைக் கூறலாம்.

பல நூற்றாண்டுகளாக அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சைகளில் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது. கற்றாழையை சருமத்தின் மேற்புறம் பயன்படுத்துவத்தைக் காட்டிலும் உட்கொள்வதால் இன்னும் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. கற்றாழை இலையை பாதியாக நறுக்கும்போது அதன் மத்தியில் இருந்து ஜெல் வெளிப்படுகிறது.

கற்றாழையின் சிறந்த பகுதியாக இது அறியப்படுகிறது. இந்த ஜெல்லில் அலோய்ன் என்னும் கூறு உள்ளது. இந்த அலோய்ன் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இது குறித்த மாற்றுக்கருத்தை தெரிவிக்கின்றனர். மேலும் அதிக அளவு கற்றாழை சாறு உட்கொள்வதால் சில தீவிர பக்க விளைவுகள் உண்டாகலாம். அவை உடல் பலவீனம், வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையாகும். கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம். அல்லது நீங்கள் தயாரிக்கும் ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம். இதன் வழுக்கும் தன்மை மற்றும் மிதமான நறுமணம் சாலட்டில் நல்ல சுவையைத் தரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin