பூசணி விதையில் ஏராமான வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் இருப்பது நமக்குத் தெரியும். குறிப்பாக, ஆண்களுக்கு விந்து கெட்டிப்பட, ஆண்மை சக்தியை அதிகரிக்கப் பயன்படும் ஒரு அற்புதப் பொருளாக இருக்கிறது. இந்த விதை அதற்காக மட்டுமா பயன்படுகிறது. வேறு என்னவெல்லாம் இதை சாப்பிட்டால் நடக்கும் என தெரிந்து கொள்வோமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூசணிக்காயில் மக்னீசியம் காப்பர் புரோட்டின் மற்றும் சிங்க் உள்ளது இவை சக்தி வாய்ந்த சத்து தரக்கூடிய நொறுக்குத்தீனி ஆகும் இவை ஏழு வகைகளில் நம் உடலுக்கு உதவுகிறது. பூசணிக்காய் விதைகள் அதில் உள்ள நல்ல விஷயங்கள் நமது உடலில் உள்ள பெரும் பகுதிக்கு உதவியாக அமைகிறது. சிறுநீரக பகுதி, இதயம் சம்பந்தப்பட்ட உறுப்புகள், மற்றும் ஒருசில புற்றுநோய் போன்ற விஷயங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. இந்த விதைகள் சுலபமாக நமது உணவில் கலந்து சாப்பிட முடியும். இதில் உள்ள முக்கியமான ஏழு பலன்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

பூசணிக்காய் பெரிதாக இருந்தாலும் அதன் விதைகள் மிகவும் சிறியது. சிறியதாக இருந்தாலும் அதன் பலன்கள் மிகவும் பெரியது. முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான் பூசணிக்காய் விதைகள். பூசணிக்காய் விதையை நாம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும் அதன் ஆற்றல் அதிகம். அதில் நல்ல கொழுப்பு மெக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளன. இதனாலேயே பூசணிக்காயின் விதைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் மனதில் நீங்கள் ஆரோக்கியத்திலும் அதிக ஆயுள் காலம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் முதலில் நமது உணவுப் பழக்க வழக்கத்தைச் சரி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதிக கொழுப்பு இல்லாமல் கட்டுடலுடன் இருக்கவும் வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள் உள்ளது. தேவையில்லாமல் நொறுக்குத் தீனி தவிர்க்க வேண்டும் சந்தையில் கிடைக்கும் நொறுக்குத்தீனி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த மினரல்கள் நிறைந்த உணவை உங்கள் சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். அந்த வரிசையில் பூசணிக்காயின் விதைகள் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin