நம் சமையலறையில் முக்கியம் வாய்ந்த பல பொருட்களில், இஞ்சிற்க்கு முதலிடம் உண்டு என்று சொன்னால், கட்டாயம் அது பொய்யாகாது. இஞ்சியை 10 ரூபாய் கொடுத்து சுலபமாக கடைகளிலிருந்து வாங்கி விடலாம். எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் ஒரு பொருளாக இஞ்சி இருந்தாலும், நம் வீட்டிலேயே இஞ்சை விளைய வைத்து, அதைப் பயன்படுத்துவதில் நமக்கு கட்டாயம் அதிக மனநிறைவு இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற செடிகளை போன்று இஞ்சி செடியை வைத்தோம்! வளர்த்தோம்! என்று குறைந்த நாட்களில் அறுவடை செய்ய முடியாது. இஞ்சி வளர்வதற்கு ஆறிலிருந்து ஏழு மாதங்கள் எடுக்கும். ஆனால் இதை வளர்ப்பதற்கு பெரிதாக சிரமப்பட வேண்டாம். நீங்க செடியை வைத்து விட்டீர்கள் என்றால், அதுதான வளரும். இஞ்சி வளர்க்க என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இஞ்சி வளர்ப்பதற்கு ஒரு அகலமான தொட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். கடையில் இருந்து தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடைந்த வாட்டர் கேன் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். சரியான விகிதத்தில் மண் கலவையை சேர்த்து, தண்ணீரை தெளித்து விடுங்கள். உங்களுடைய தொட்டியில் தேவையற்ற தண்ணீர் வெளியேறுவதற்கு ஓட்டை சரியான முறையில் இருக்கவேண்டும். அதை ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை சிறிய துண்டு அளவு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இஞ்சி துண்டை, கண் பகுதி இருக்குமாறு எடுத்துக்கொள்ளுங்கள். (கண் பகுதி என்றால் இஞ்சியில், சிறிய சிறிய கொம்புகள் பக்கவாட்டில், குட்டி குட்டியாக முளைத்திருக்கும் அல்லவா, அதுதான்.) அந்த இஞ்சி துண்டில், வெட்டிய பகுதியானது, மண்ணில் ஊன்றிய படியும், இஞ்சியின் கண் பகுதி மேலே பார்த்தவாறு இருக்கும் படி, மண்ணில் லேசாக புதைத்து வைத்தாலே போதும். இரண்டு விரல்களை வைத்து இஞ்சியை மண்ணில் அழுத்தம் கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin