ஒவ்வொருவரும் தன் வீட்டில் செல்வமும், வளமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது வழக்கம். பண வரவும், உடல் ஆரோக்கியமும் அனைத்து பெற லட்சுமி தேவியை வழிபடும் முறையை நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகள் இங்கு பார்ப்போம். மூடியுடன் கூடிய ஒரு சிறு மண் கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது சர்க்கரை, உப்பு, நவதானியம், பச்சரிசி, பருப்பு, புளி, சிறிய வலம்புரி சங்கு, ஐம்பொன் (சிறிய அளவு), குங்குமப்பூ, வெற்றிலை, பாக்கு, புனுகு, ஜவ்வாது ஆகியவற்றை வியாழக் கிழமை தினத்தில் வாங்கி வைக்கவும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று மண் சட்டிக்கு விபூதி, சந்தனம், குங்கும திலகம் இடவும். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேலே குறிப்பிட்ட பொருட்களை மண் சட்டியில் இட்டு வீட்டின் பூஜை அறையில் வைத்து மகா லட்சுமி தேவியை வழிபடவும். ‘ஓம் தன தான்ய லட்சுமியை வசி வசி வசியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபடவும். பின் அந்த தூப தீபம் காட்டி வழிபடவும். பின்னர் அந்த கலசத்தை மூடி பூஜை அறையில் வைத்துவிடவும். இதே போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி தேவியை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

எந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு மதிப்பு கொடுக்கப்படுகின்றதோ, அவள் சிரித்துக் கொண்டிருக்கின்றாளோ அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியேறுவாள். எந்த வீட்டு பெண்மணி அவருடைய வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்ணுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், தண்ணீரும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் வீட்டில் சகல செளபாகியம், சந்தோஷம், வளம் பெருகும். எந்த ஒரு வீட்டில் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கிறதோ அங்கு திருமகள் குடியேற விரும்புவாள்.

ஏழைகளுக்கும், ஊனமுற்றோருக்கும் முடிந்தளவு தர்மம் செய்யுங்கள் உங்களைத் தேடி தேவி வருவாள். வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் லட்சுமி வாசம் செய்வாள். அதனால் லட்சுமி கடாட்சம் பெருகும். எந்த ஒரு தீய சக்திகளும் அணுகாது. எந்த சர்ச்சையோ, சண்டையோ இல்லாமல் பெண்கள் இருக்கும் வீட்டில் அன்பும், பொருளும், வளமும் அதிகரிக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin