ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் கடவுள் அவனுடைய குலதெய்வம் தான். முன்னோர்கள் எப்படி நம்முடன் இருந்து நம்மை காக்கிறார்களோ அதே போல் தான் குலதெய்வம் காக்கும் கடவுள். குடும்ப கடவுள் ஆவார். அவரின் அருள் பெற்றால் சகலமும் நமக்கு கிடைத்துவிடும். இதில் தங்களுடைய குலதெய்வம் என்னவென்றே தெரியாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு கிடைத்த அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை. இந்த கட்டையை வைத்து உங்கள் குலதெய்வத்தை எப்படி வரவைப்பது? கருங்காலியின் மகிமைகள் என்ன? என்பதை பற்றி இப்பதிவில் நாம் காணலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முற்றிய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் இன்ன பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறுமாம். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும்.

அதீத சக்தி பெற்ற உண்மையான கருங்காலி கட்டை ஒன்றை உங்கள் வசதிக்கேற்ப சரியான அளவில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். போலியானது விற்பனைக்கு புழங்குகின்றன. பார்த்து வாங்குவது நல்லது. ரசாயன பூச்சு பூசப்பட்ட கருங்காலி கட்டையில் நீர் பட்டவுடன் அதன் பூச்சு கைகளில் ஒட்டிக்கொள்ளும். புனித நீர் வீட்டில் வைத்திருந்தால் அந்த நீரை கொண்டு கருங்காலியை எல்லா பக்கமும் தடவி வைக்கலாம். இல்லையேல் பசும்பால் கொண்டும் தடவலாம். பின்னர் கட்டையின் மேற்புறத்தில் சந்தனம், குங்குமம் மூன்று முறை அருகருகே இட்டு கொள்ள வேண்டும். அதன் பின் நாணயம் மூன்றை எடுத்து கும்குமம் இட்ட இடத்தில் வைக்க வேண்டும். நாயுருவி வேர் கிடைத்தால் அதையும் கட்டையின் மேல் வைத்து கொள்வது நல்லது.

இப்போது உங்கள் குலதெய்வத்தை நினைத்து மலர் மாலை ஒன்றை சாற்றுங்கள். பின்னர் தூப, தீபம் காட்ட வேண்டும். தூபம் காட்டும் போது குலதெய்வ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களின் குலதெய்வம் மகிமை வாய்ந்த கருங்காலியினுள் இறங்கும். வேண்டிய வரம் கிட்டும். உங்களின் நலனே உங்கள் தெய்வத்திற்கு முக்கியமானது என்பதை மறவாதீர்கள். நீங்கள் எந்த பிரச்சனைகளில் இருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கக் கூடிய வழியை குலதெய்வம் நிச்சயம் காட்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வேண்டிய வரம் பெறலாம். நீங்கள் முருகன் மந்திரத்தை உச்சரிக்கவும். உங்களது குலதெய்வம் வசியம் செய்யப்பட்டு உங்களுக்கு அருள் புரிவார்கள். அத்தகைய ஆற்றல் கருங்காலிக்கு உண்டு.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin