தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கு வளமற்ற நிலங்கள் பராமரிக்கப்படாத வயல்கள் சாலையோரங்கள் சுடுகாடு என எங்கும் விளையும் பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கத்தரிப் பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எருக்கன் பூவை காயவைத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்தக் கொள்ள வேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மைப்போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும் போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருன்தினால், உடனே இரைப்பு தணியும்.

10 கிரம் இஞ்சி, 3 வெள்ளருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும் என்கிறார்கள்.

எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin