இந்தப் பூண்டு பொடி அரைக்கும் போதே நமக்கு இட்லிக்கு தொட்டு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு வித்தியாசமான முறையில் ஒரு பூண்டு பொடி ரெசிபியை மிக மிக சுலபமாக எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கீழே குறிப்பிட்டுள்ள அளவுகளில் இதேபோல் ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் இது நீங்க அரைத்த பூண்டு பொடியா அல்லது கடையில் வாங்கியதா என்று எல்லோரும் கேட்பாங்க. சரி நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த பூண்டு பொடிக்கு தேவையான அளவுகளை பார்த்துவிடுவோம். பூண்டு – 200 கிராம், உளுந்து – 200 கிராம், வரமிளகாய் – 8, கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய் துருவல் – 2 கைப்பிடி, பெருங்காயம் – சிறிய துண்டு, தேவையான அளவு – கல் உப்பு. முதலில் பூண்டை தோல் உரித்து நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்குவதிலும் ஒரு டிப்ஸ் உள்ளது. ஒரு பூண்டை எடுத்து ஒரு தட்டு தட்ட வேண்டும். அவ்வளவு தான் அந்த பூண்டு அதிகமாகவும் பொடிப்பொடியாக நசுக்கி விடக் கூடாது. எல்லா பூண்டும் சீராக தட்டி இருக்க வேண்டும். காரணம் இதை எண்ணெயில் போட்டு வறுக்கும் போது, ஒரு பூண்டு சிவந்தும் ஒரு பூண்டு சிவக்காமலும் இருந்தால் பூண்டு பொடி சரியான பக்குவத்தில் வராது. இது ஒரு குறிப்பு.

சரி, எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவேண்டும். முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும் முதலில் தட்டி வைத்திருக்கும் பூண்டை போட்டு பக்குவமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுபட்ட பூண்டை எடுத்து கையில் உடைத்தால் அப்பளம் போல உடைய வேண்டும். அதே சமயம் பூண்டு கருதிவிடக்கூடாது. வறுத்த பூண்டினை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து தான் பூண்டு வறுக்க வேண்டும்.

அடுத்தபடியாக பெருங்காய கட்டியை எண்ணெயில் போட்டு பொரியவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக உளுந்தம் பருப்பை ஒரு ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வரமிளகாயை வறுக்கவேண்டும். அடுத்தபடியாக ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையைப் போட்டு கறிவேப்பிலையையும் கையில் எடுத்து உடைத்தால் உடைய வேண்டும். அந்த பக்குவத்திற்கு வறுக்க வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin