அன்றாடம் நமக்குத் தெரிந்து எவ்வளவோ பிரச்சனைகள் எதிர் கொண்டு வருவோம். நம் கண்களுக்கு புலப்படும் எல்லா விதமான பிரச்சனைகளையும் நம்மால் எதிர்த்து விடமுடியும். ஆனால் கண்களுக்கு தெரியாமல் செயல்படும் மனிதர்களும், துஷ்ட சக்திகளும், தீவினைகளை நமக்கு புரிந்து கொண்டு தான் இருக்கும். அவற்றிலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்? உங்களை சுற்றி எதுவோ நடக்கிறது! ஆனால் என்னவென்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இந்த பரிகாரத்தை நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒரே ஒரு மூலிகைப் பொருள் தேவைப்படும் அவ்வளவுதான். வேறு எந்த பொருளையும் நீங்கள் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. இந்த ஒரே ஒரு மூலிகை குச்சி உங்களிடம் இருந்தால் கண்களுக்கு தெரியாத எந்த விதமான பிரச்சனையும் உங்களை நெருங்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. கண்ணுக்குத் தெரியாத பில்லி, சூனியம், ஏவல் போன்றவையும், முதுகுக்கு பின்னால் பேசுபவர்களின் சதி, சூழ்ச்சிகளையும் முறியடிக்க இதை செய்து வைத்துக் கொள்ளலாம். கண்களுக்கு தெரிந்தால் கூட பரவாயில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதிலிருந்து தப்பிக்க நாம் அப்படி என்ன செய்யப் போகிறோம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண்ணுக்கு தெரியாத தோஷங்களும், சூழ்ச்சிகளும், தீவினைகளும் தவிடு பொடியாக நாட்டு மருந்து கடைகளில் நாயுருவி குச்சி கிடைக்கப்பெறும். இதனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நாயுருவி குச்சி உங்களுக்கு தெரிந்த மற்ற இடங்களில் கிடைத்தாலும் ஒரு குச்சியை மட்டும் உடைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அதிலிருந்த இரண்டு அங்குல அளவிற்கு சிறிய அளவில் குச்சியை உடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த குச்சியை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து சுருட்டி கொள்ளுங்கள். பின்னர் இருபுறமும் மடித்து ஐந்து நிறங்களை கொண்ட நூல்கள் கொண்டு நன்கு இறுக்கமாக கட்டி விட வேண்டும். ஐந்து நிறங்களில் கருப்பு நிறம் குறிப்பாக இடம்பெற வேண்டும். மற்ற நான்கு நிறங்கள் உங்கள் விருப்பம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை பூஜை அறையில் வைத்து அமைதியாக அமர்ந்து கீழே இருக்கும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த நாயுருவி குச்சி சக்தி பெறுகிறது. மந்திரம் உச்சரிக்காமல் இதனைப் பயன்படுத்துவதில் பயனில்லை.

By admin