மனிதர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது. இதை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிலக்கடலை தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்கிறது. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்காலங்களில் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் வெகுவாக குறைப்பதாகவும் அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin