மூட்டு வலி தோன்றுவதற்கு காரணங்கள் மூட்டுகளில் உள்ள பகுதிகளில் இடுப்பு, கால் முட்டி, கணுக்கால், தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கால் விரல்கள், கைவிரல்கள் போன்றவற்றுக்கு சரிவர இயக்கம் கொடுக்காததால் மூட்டுகளில் வலி உண்டாகிறது. இது மூட்டுகளில் சதை, தோல் பகுதிகளில் விரைப்பை உண்டாக்க செய்துவிடும். உடல் பருமன், உடல் உழைப்பின்மை, உடல் பயிற்சி செய்யாதது, இதய நோய்கள், சர்க்கரை வியாதி, இதய நோய் இருப்பவர்களுக்கு மூட்டுகளில் வலி உண்டாகும் அபாயம் அதிகமாகவே இருக்கும். இந்த மூட்டு வலிகள் பல வகைகளில் வரக்கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு மூட்டு வலி அவ்வபோது வரக்கூடும். இதற்கு காரணம் வாயுவால் உண்டாகலாம். அடிக்கடி முட்டு வலி வரும் போது நீங்கள் சமீபத்தில் எடுத்துகொண்ட உணவு பொருள்கள் குறித்தும் ஆய்வு செய்யுங்கள். சிலருக்கு உடலில் வாய்வு அதிகமாக இருக்கும். வாய்வு நீர் மூட்டுகளில் தேங்கி இருக்கும். இந்நிலையில் வாய்வுவை அதிகரிக்கும் பருப்பு வகைகள, பயறு வகைகள், கிழங்கு வகைகள் எடுத்துகொள்வதன் மூலம் இந்த வலி உபாதை அதிகமாக இருக்கலாம். இது வாயுவை தரக்கூடியது, வாதத்தை கூட்டகூடியது.

சிலருக்கு மூட்டுவலி பித்தம் அதிகரிப்பது வரலாம். உடலில் பித்தம் உடலின் வெப்பத்தை காக்கிறது. ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள் போன்றவை இயங்கும் வேலையை பார்ப்பது பித்தம் தான். இந்த பித்தம் அதிகரிப்பதால் அஜீரணம் முதல் மன அழுத்தம் வரை பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதில் ஒன்று மூட்டுவலி. உங்கள் மூட்டுவலி அதிகரிக்கும் போது நீங்கள் டீ காஃபி, மது பானங்கள், கோதுமை உணவுகள், காரமான உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றால் வலி உபாதை அதிகமாக இருந்தால் உங்கள் மூட்டுவலிக்கு காரணம் பித்தமாக இருக்கலாம்.

கபத்தால் வரும் நோய்கள் என்றால் அது சளி, இருமல், ஆஸ்துமா மட்டும் அல்ல. கப மூட்டுவலியும் உண்டாகிறது. குறிப்பாக கோடையிலும் மழைக்காலத்திலும் வரக்கூடிய மூட்டுவலிகள் கபத்தினால் வரக்கூடியவையாக இருக்கலாம். இந்த வலியை கூடுதலாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் முன்னதாக அதிக இனிப்பு பண்டங்கள், தயிர், இறைச்சி, நெய், எண்ணெய், வெள்ளரி, பால் சார்ந்த உணவு பொருள்கள் எடுத்துகொள்ளும் போது இந்த உபாதை அதிகமாக இருப்பதை உணரலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin