குடும்பம் என்றால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி இல்லாத இடத்தில் நிச்சயமாக செல்வம் நிலைக்காது. செல்வம் இல்லாத வீட்டில் மகாலட்சுமி குடி இருக்க மாட்டாள். மகாலட்சுமி இல்லாத வீட்டில் வறுமை தான் குடியிருக்கும். வறுமை இருக்கும் வீட்டில் கஷ்டம் சோகம் துயரம் துன்பம் கடன் அனைத்தும் வந்து குடியேறி விடும். சரி, சோகம் துயரம் துன்பம் இவை அனைத்தையும் வெளியே விரட்டி அடித்து, குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்றால் நம் வீட்டு பூஜை அறையில் எந்த பூவை வைத்து பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய மகத்துவங்கள் நிறைந்த அந்த பூ மனோரஞ்சிதம் பூ. மனோரஞ்சித பூவை தினம் தோறும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் மனக் கஷ்டங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பூ கடைகளில் முன்கூட்டியே சொல்லி வைத்து, பூஜைக்கு முந்தைய நாளே பூவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமையில் இந்த மனோரஞ்சிதம் பூ கிடைத்தால் மிகவும் சிறப்பு. வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு எப்போதும்போல் பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த பரிகார பூஜைக்காக தனியாக ஒரு மண் அகல்விளக்கு தேவை. அந்த மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் சிறிய பச்சை கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாசம் மிகுந்த இந்த தீபத்திற்கு அருகில் மனோரஞ்சித பூவை வைத்துவிடுங்கள். அதன்பின்பு உங்களுடைய குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக தீப தூப கற்பூர ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இது முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை. இந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய பூஜையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை தினம்தோறும் 7 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin