ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை ஆசியா, அமெரிக்க, ஆப்ரிக்காவில் பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி விதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால், கீழே தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

ஆளி விதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுக்க உதவும். மேலும் இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு, உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். மேலும் இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin