ஆசியாவில் வாழும் மக்களுக்கு முக்கிய உணவு பொருளாக அரிசி உள்ளது. அரிசியில் பல வகைகள் உள்ளன. கருப்பு கவுனி அரிசி தினமும் சாப்பிடலாமா என்று சிலர் நினைப்பார்கள், ஆனால் கருப்பு கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான அரிசிகளின் வரிசையில் கருப்பு கவுனி அரிசி முதல் இடத்தைப் பிடிக்கிறது. இந்த அரிசின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, திணை அரிசி, கவுனி அரிசி என்று பல்வேறு அரிசி வகைகள் உள்ளன. இந்த அரிசி வகைகள் நமது முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு பின்பு வெள்ளை அரிசியின் வருகையால் மறைக்கப்பட்டவை. வெள்ளை அரிசிக்கு பதிலாக மற்ற வகை அரிசிகளை உணவில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. இதனால் நீரிழிவு ,புற்றுநோய், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், உணவு சாப்பிட்ட பின் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், சீராக வைப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. மற்ற அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது. மேலும் ட்ரை க்ளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், இதயம் தொடர்பான கோளாறுகளில் இருந்து விடுபெற கருப்பு கவுனி அரிசியை சாப்பிடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin