ஆணி என்பது, தோலில் அதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தோன்றுவதாகும். ஆணி பெரும்பாலும் காலில், அதுவும் பாதங்களிலும் கால் விரல்களின் இடுக்கிலும் தான் தோன்றுகிறது. உடலின் மற்ற இடங்களிலும் அவை தோன்றலாம்.சரியாக பொருந்தாத காலணி அணிவது தான் ஆணி தோன்றுவதற்கு மிக முக்கியமான காரணம். இறுக்கமான காலணிகள் அல்லது ஹீல்ஸ் அணிந்து அதிக நேரம் நிற்பதாலும் கால் ஆணி ஏற்படலாம். காலில் ஷூ அணியாமல் நடப்பது, உறையின்றி ஷூ போடுவது, அதிக உழைப்பு, பாதத்திற்கு அதிக அழுத்தம் தரும் விளையாட்டுகள் போன்றவையும் காலில் ஆணியை ஏற்படுத்தும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கால் பெருவிரலில் வீக்கம், வியர்வை சுரப்பி பாதிப்பு, காலில் வடுக்கள் மற்றும் மருக்கள் உள்ளவர்களுக்கு கால் ஆணி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, காலில் இரத்த ஓட்டம் குறைவதால், ஆணி ஏற்படும் வாய்ப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழலில், ஒரு மருத்துவரை சந்தித்து வைத்தியம் பார்ப்பது நல்லது.

தடித்த கடினமான தோல், உப்பிய புடைப்புகள், அழுத்தும்போது வலி ஆகியவை கால் ஆணியின் அறிகுறிகள். அவை நிற்கும்போதும் நடக்கும்போதும் கூட மிகுந்த அசௌகரியத்தை உண்டு பண்ணும்.

பொதுவாக, அழுத்தம் அதிகம் கொடுக்காமல் இருந்தால், ஆணி தானாகவே சரி ஆகி விடும். தேவைப்பட்டால், நிறைய மருந்துகள், லோஷன்கள், கார்ன் கேப் (corn cap) போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். கால் ஆணிக்கு வீட்டிலேயே எளிய முறையிலும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.அதைத்தான் கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம்

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin