படுக்கை அறையில் ஒரு அங்கமாக இருப்பது தான் வார்ட்ரோப் எனப்படும் துணி அலமாரி. இன்றைய பரப்பரப்பான சூழ்நிலையில் நம்மில் பல பேருக்கு அதை பராமரிக்க நேரமே கிடைப்பதில்லை. அனைத்து துணிகள், அழகு பொருட்கள், நகைகள் மற்றும் இதர பொருட்களை மொத்தமாக உள்ளே அடைத்து விட்டு விடுவோம். பின் அதில் இருந்த நமக்கு தேவையான பொருளை எடுப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துணி அலமாரியை ஒவ்வொரு முறை திறக்கும் போது துணிகளும், பொருட்களும் கீழே விழுவதை கட்டுப்படுத்த முடியவில்லையா? தினமும் அலுவலகத்திற்கு வேகமாக போய் சேர வேண்டியதன் பொருட்டு, துணி அலமாரியை சிறந்த முறையில் ஒழுங்குப்படுத்த நேரம் கிடைக்கவில்லையா? இதோ, அத்தகைய துணி அலமாரியை நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி பராமரிக்க கீழ்கூறிய 5 வழிகள் உதவியாக இருக்கும்.

முதலில் துணி அலமாரியில் உள்ள அனைத்தையும் எடுத்து விட வேண்டும். இவ்வாறு முதலில் இருந்து ஆரம்பிக்கும் போது, ஒரு துணியை வைத்து உட்புறத்தை நன்கு துடைத்துக் கொள்ளவும். மேலும் மூலை முடுக்குகளில் தான் அதிக தூசியும், அழுக்கும் அடைந்திருப்பதால், அந்த இடங்களை துடைக்க விட்டு விட வேண்டாம். துணி அலமாரியில் இருக்கும் டிராயர்களை கழற்றி எடுக்க முடிந்தால், அதை வெளியில் எடுத்து துணியை வைத்து நன்கு துடைத்துக் கொள்ளவும். பின் நறுமணம் வீசும் சில பொருட்களை அந்த டிராயர்களில் வைத்து விட வேண்டும். பூச்சிகளில் இருந்து பாதுகாக்க ஃபீனால்ப்த்தலீன் உருண்டைகளை பயன்படுத்தினால், அவைகளை அப்படியே உள்ளே வைக்க வேண்டாம். அவைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் நன்றாக சுருட்டி உள்ளே தொங்க விட வேண்டும்.

துணி அலமாரியை துடைத்தப் பின்னர், எடுத்தவுடனே பொருட்களை அடுக்குவதில் போகக் கூடாது. மாறாக எப்படி அடுக்கினால் வசதியாகவும், பார்க்க அழகாகவும், பராமரிக்க சுலபமாகவும் இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனால் முதலில் ஹேங்கர்கள் எல்லாம் ஒரே அளவில், ஒரே வடிவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இப்போதெல்லாம் இடத்தை அடைக்காமல் இருக்கவும், துணி அலமாரியில் அதிக இடம் கிடைக்கும் வண்ணமும் சில விசேஷ வகையான ஹேங்கர்கள் சந்தையில் கிடைக்கின்றன.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin