வேப்பிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பம்பூ போன்றவற்றை உலர்த்தி அதை சாம்பிரானி உடன் சேர்த்து அல்லது நெருப்புத்துண்டுகளுடன் சேர்த்து புகைப்போட்டால் புகை வாசனைக்கு கொசு வராது. முன்னோர்கள் அகிற்கட்டையை துண்டுகளாக்கி புகைபோட்டு பூச்சி விரட்டி இருக்கிறார்கள். அதனால் இந்த முறையிலும் கொசு வராமல் தடுக்கலாம். புகை வாடை நீண்ட நேரம் இருக்கும் என்பதால் கொசுக்களும் வராமல் பாதுகாக்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொசு வில்லை இயற்கையாக தயாரித்து பயன்படுத்தலாம். தேங்காய் ஓடு, எலுமிச்சை புல், தர்ப்பப்பை புல், வேப்பிலை, நொச்சி அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வில்லையாக தட்டி வெயிலில் காய விடவும். இதை புகையில் போட்டு அல்லது அப்படியே எரியவிட்டு வைப்பதன் மூலம் கொசுவிரட்டலாம். இது இயற்கையானது என்பதால் இரண்டு வில்லைகள் வரை கூட பயன்படுத்தலாம்.

வாசனை திரவியங்களையும் இயற்கையாக ஜவ்வாது, சந்தனம் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறில் கற்பூரம் அல்லது கற்பூராதி தைலம் கலந்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்யலாம். வேப்பிலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் வீட்டை சுத்தம் செய்யலாம். வேப்பிலை எண்ணெயை உடலில் தடவி தூங்கினால் கொசுக்கள் போன்று விஷ ஜந்துக்களும் அண்டாமல் தடுக்கலாம்.

அகல் விளக்கில் விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் இரண்டையும் கலந்து விளக்கேற்றும் போது அந்த வாடைக்கு கொசு வராமல் இருக்கும். இவையெல்லாம் செய்தாலே கொசுக்களும் வராது. கொசுக்களினால் உண்டாகும் நோய்களும் வராது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் இந்த மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து இயற்கையாகவே பாதுகாக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin