பொதுவாக மிக்ஸி வைத்திருப்பவர்கள் அதனை பராமரிப்பதில் சோம்பேறித்தனம் படுவார்கள். அடிக்கடி மிக்ஸியை துடைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சில எளிய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், எப்போதும் புதிது போல உங்கள் மிக்ஸி மின்னும். மேலும் மிக்ஸி நீண்ட காலம் உழைக்கக் கூடிய வழிமுறைகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக்ஸியில் முக்கியமாக நாம் ரப்பர், ஜாரின் பின்பகுதி, பிளேடு, மற்றும் மிக்ஸியை துடைக்க கடினமாக இருக்கும் பகுதிகளை கவனிக்க வேண்டும். இதனை எப்படி சுலபமாக கையாளலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மிக்சியின் அடியில் புஷ் போல தரையில் பிடித்துக் கொள்ள சில ரப்பர்கள் கொடுத்திருந்தால் அதனை வேகமாக பிடித்து இழுக்கும் பொழுது மிக்ஸி சில பாதிப்புகள் அடைய வாய்ப்புகள் உண்டு எனவே புஷ் உள்ளவர்கள் அடியில் ஒரு வீணாகிப் போன தட்டை வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு தேவையான இடத்தில் ஈசியாக நகர்த்தியும் கொள்ளலாம்.

மிக்ஸியின் ஒயரை ஏடாகூடமாக மடித்து வைக்கும் பொழுது அதுவும் மிக்ஸியை சில பாதிப்புகள் அடைய செய்யும். மேலும் நமக்கு அது இடைஞ்சல் ஆகவும் இருக்கும். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது. மிக்ஸியின் ஏதாவது ஒரு பகுதியில் மேற்புறமாக செல்லோடேப் போட்டு ரப்பர்பேண்டை ஒட்டி விடுங்கள். மிக்ஸியின் ஒயரை எப்போதும் போல வட்டமாக சுற்றி, அந்த ரப்பர் பேண்ட் ஆல் கட்டிக் கொள்ளலாம். இதனால் ஒயருக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது, உங்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்காது.

மிக்ஸி ஜாருடைய ரப்பரை அடிக்கடி கழட்டி சுத்தம் செய்யக்கூடாது. இதனால் வெகு விரைவாக ரப்பர் லூஸ் ஆகி விடும். மாதம் ஒருமுறை கழட்டி சுத்தம் செய்தால் போதும். ரப்பர் லேசாக தளர்வது போல தெரிந்தால் அதன் மேலே ஒரு ரப்பர் பேண்டை இறுக்கமாக போட்டு விடுங்கள். பொருட்கள் வெளியில் சிந்தாமல் பாதுகாப்பாக இருக்கும். ரப்பரும் சீக்கிரம் தளராது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin