குடும்ப பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை சமையலறை சிங்கை எப்படி சுத்தம் செய்வது என்பது தான். பாத்திரங்களில் இருக்கும் அழுக்கு, எண்ணெய்கள் இவற்றால் சமையலறை சிங்கானது அழுக்கேறிப் போய் காணப்படும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமும் தேய்த்து தேய்த்து கழுவினாலும் சிங்கில் உள்ள அழுக்கு நீங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் சுத்தம் செய்யவும் அதிக நேரம் ஆகிறது. சமையலறை சிங்கை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகி அழற்சி, ஒவ்வாமை மற்றும் உடல் நல பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சமையலறை மேடையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சரி வாங்க இந்த சமையலறை சிங்கை எப்படி எளிய முறையில் சுத்தம் செய்யலாம் என அறிவோம்.

பாத்திரம் கழுவும் சோப்பு, பேக்கிங் சோடா மற்றும் டீகிரீஸர் இவற்றை பயன்படுத்தி சிங்கை சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை என சுத்தம் செய்வது உங்கள் சிங்கை புதியது போல் வைத்திருக்க உதவுகிறது. சிங்கின் வடிகால் பகுதி, சிங்கின் பிளேட் பகுதி என மூலை முடுக்குகளிலும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிங்கில் உள்ள எண்ணெய் பசையை போக்க பேக்கிங் சோடா மற்றும் சோப்பு கலவை உதவுகிறது. பேக்கிங் சோடா சிங்கில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

வடிகால் பகுதியை சுத்தம் செய்யும் போது சிறிய பிரஷ்ஷைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பல் துலக்கும் பிரஷ் கொண்டு வடிகால் பகுதியை நீங்கள் சுத்தம் செய்யலாம். மேலும் சமையல் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரை வடிகால் வழியாக ஊற்றி அதிலுள்ள அழுக்குகளை வெளியேற்றலாம். இது சிங்கை நன்றாக சுத்தம் செய்ய உதவுகிறது. சிங்கை சுத்தம் செய்யும்போது உங்கள் கைகள் பாழாகமல் இருக்க கையுறைகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இறுதியாக உலர்ந்த துணியால் உங்கள் சிங்கை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin