இப்படி மட்டும் நீங்க தேங்காய் சட்னி அரைத்து பாருங்க!! உங்க வீட்டில எல்லாரும் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள் !! ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி !!

வணக்கம் நண்பர்களே நம் வீட்டில் சாதாரணமாக எப்போதும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி அரைத்து வருவோம் ஆனால் நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது அந்த சட்னி நன்றாக இருக்கும் நம்மில் பலர் பலமுறை ஓட்டலில் மட்டும் எப்படித்தான் சட்னி அறைக்கிறார்களோ என வினவி இருப்போம் அதற்கான பதில் இங்கே முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம் இது நான்கு அல்லது ஐந்து பேருக்கான அளவில் சட்னி செய்யும் முறை.

அரை மூடி தேங்காய் கால் கப் பொட்டுக்கடலை ஐந்து சிறிய சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 பல் பூண்டு பூண்டை விட இருமடங்கு இஞ்சி இது அனைத்தையும் எடுத்துக் கொண்டு நம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும் நன்கு அரைத்து பிறகு மசாலாவாக மாறிய பின்புதான் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி அரைக்க வேண்டும் அதன் பின்பு கொத்தமல்லி தழை சிறிதளவு எடுத்து அதனுள் போட்டு சும்மா இரு சுழற்சிகள் மட்டும் செய்ய வேண்டும் செய்த பின்பு சிறிது உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஆன் செய்து ஆப் செய்தால் போதும் சட்னி கட்டியாக இருந்தால் வேண்டுமானாலும் நீங்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் உங்கள் விருப்பத்திற்கு தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு நீங்க சேர்த்துக்கொள்ளலாம் இதன் பிறகு நீங்க எப்பவும் போல பச்ச மொளகா அல்லது காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கினால் போதுங்க சூப்பரான சுவையான ஹோட்டல் தேங்காய் சட்னி ரெடி இது நீங்க வீட்ல பயன்படுத்தி பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்.

தேவைப்படும் பொருட்கள் அரை மூடி தேங்காய் கால் கப் பொட்டுக்கடலை ஐந்து சிறிய சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 பல் பூண்டு விரல் அளவு இஞ்சி கொத்தமல்லித்தழை தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சர்க்கரை 2 பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடுகு கருவேப்பிலை தேவையான அளவு தண்ணீர் அவ்வளவுதான் நம்மில் பலர் பலமுறை ஓட்டலில் மட்டும் எப்படித்தான் சட்னி அறைக்கிறார்களோ என வினவி இருப்போம் அதற்கான பதில் இங்கே முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம் இது நான்கு அல்லது ஐந்து பேருக்கான அளவில் சட்னி செய்யும் முறை. நீங்கள் சற்றும் எதிர்பாராத அளவில் ஹோட்டலில் சாப்பிடும் சுவையான சட்னி ரெடி இதை மட்டும் ஒருமுறை செய்து பயன்படுத்திப்பாருங்கள் பிறகு மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதேபோன்று சட்னி அரைக்க சொல்வார்கள் இது போன்று பல புதிய உணவுகளை கற்றுக்கொள்ள நம் இணைய பக்கத்தை தொடருங்கள் நாங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும் இங்கே வழங்குவோம் நன்றி வணக்கம்.