நமது பாரம்பரிய சமையலில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் சிலவற்றை வாசனை பொருட்கள் என அழைக்கின்றனர். ஏனெனில் இவற்றை சமையலில் சேர்க்கும் போது உணவில் ருசியை கூட்டுவதோடு சிறந்த வாசனையையும் உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட வாசனை பொருட்களில் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு பொருள் தான் “கிராம்பு”. என்னென்ன குறைபாடுகளை கிராம்பு மூலம் தீர்க்க முடியும் என்பதை இங்கு அறியலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலரா எனும் நோய் கிருமிகள் நிறைந்த தண்ணீர் அருந்துவதன் மூலம் அதிவிரைவாக மக்கள் பலருக்கும் பரவக்கூடிய நோயாகும் இந்த நோயால் பேதி, வாந்தி போன்றவை ஏற்பட்டு இறுதியில் இறப்பு கூட நேரலாம். கிராம்பு, காலரா நோய்கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு உடலில் இருக்கும் காலரா கிருமிகளை அழிக்கிறது.

வாய் சம்பந்தமான பிரச்சனைகள், பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதில் யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் பற்களில் கிருமிகள் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. குளிர் காலங்களில் ஈறுகளின் வீக்கத்தால் அவதிபடுபவர்கள் ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் சற்று நேரம் அதக்கி வைத்திருந்தால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

கிராம்பு உடலில் குறிப்பாக வயிற்றில் இருக்கும் கிருமி தொற்றுகளை நீக்க வல்லது. மேலும் அஜீரணம், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லைகள், அடிக்கடி வாந்தி ஏற்படுவது போன்ற அத்தனை பிரச்சனைகளையும் கரம்பையோ அல்லது கரும்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்களையோ சாப்பிட்டு வருபவர்களுக்கு விரைவில் நீங்குகிறது. கிராம்பு இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin