இதற்கு முன்னர் இந்த செடிகளை இங்கு பார்த்ததில்லை. ஆனாலும் வேறு எங்கோ இதே செடிகளை பார்த்ததாக நினைவு. பெயரும் தெரியவில்லை. சிலரைக் கேட்டதில் அவர்களும் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். எனவே கிராமத்தில் இருக்கும், தஞ்சையில் தோட்டக்கலை துறையில் பணிபுரியும், எனது மாமா பையனுக்கு வாட்ஸ்அப்பில் இந்த செடிகளை படம் எடுத்து அனுப்பி விவரம் கேட்டு இருந்தேன். அவரும் தனது பதிலில், Botany name: martynia annua, Common name: Devil’s claw, Family name: pedaliaceae என்று தெரிவித்து இருந்தார். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்புறம் வழக்கம்போல் martynia annua என்று கூகிளில் தேடியதில் விவரங்கள் கிடைத்தன. இந்த செடியானது தமிழில் புலிநகம், காக்காமூக்கு செடி, என்றும் பல்வேறு பெயர்களில் இதன் காயின் வடிவத்தை வைத்து அழைக்கப்படுகிறது. பூனைப்புடுக்கு என்றும் தமிழில் சொல்லுகிறார்கள். இந்த செடியின் காயும் அப்படித்தான் தோன்றுகிறது. தெலுங்கில் கருடமூக்கு என்று அழைக்கிறார்கள்.

இது ஒரு காட்டு மூலிகை என்றாலும் TB (tuberculosis) எனப்படும் காசநோய், தொண்டைப்புண், பாம்புக்கடி, காக்கைவலிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படும் என்று மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: தேள்கொடுக்கி என்றும் இந்தசெடி விக்கிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளது; ஆனால் தேள்கொடுக்கி என்று வேறொரு மூலிகையை இண்டர்நெட்டில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin