சமைப்பதில் எவ்வளவு சீனியர் ஆக இருந்தாலும், சமையலறை பற்றிய சில குறிப்புகள் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரியாமல் இருக்கும். உங்களுக்கு இதுவரை தெரியாத புத்தம்புதிய சமையலறைக்கு தேவையான 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக தெரிந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு போட்டால், அந்த கடுகு கட்டாயம் படபடவென பொரிந்து கீழே தெறிக்கும். சில சமயம் நம்மேல் கூட விழுந்துவிடும். இப்படி எண்ணெயில் போட்ட கடுகு சிதறாமல் பொரிவதற்கு என்ன செய்யலாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடாகும் போது ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை போட்டு விடுங்கள். அதன் பின்பு கடுகை எண்ணெயில் போட்டு தாளித்தால் கடுகு சிதறாமல் பொரியும். ட்ரை பண்ணி பாருங்க.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால் நெய் எண்ணெய் ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை தேய்த்து சுத்தம் செய்வது தான். இப்படிப்பட்ட எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும் பாத்திரங்களை பல் தேய்க்கும் பேஸ்டை கொண்டு சுத்தம் செய்தால் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு நீங்கி விடும். சமையலறையில் அடுக்கி வைத்திருக்கும் மளிகை ஜாமான்களில் 1 கிலோ வாங்கி வைத்தாலும் வண்டு பிடிக்கிறது. 100 கிராம் அளவு வாங்கி வைத்தாலும் வண்டுபிடிக்கிறது. இந்த பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, ரவை, மைதா, இந்த பொருட்களை எல்லாம் பூச்சி வராமல் பாதுகாப்பது என்பது மிக மிக கஷ்டமான விஷயம்தான்.

இதற்க்கு ஒரு பெஸ்ட் டிப்ஸ். கொட்டாங்குச்சி, தேங்காய் துருவிய பின்பு, அந்த கொட்டாங்குச்சியை சிறு துண்டுகளாக உடைத்து வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்‌. அதில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. இந்த சின்ன சின்ன கொட்டாங்குச்சிகளை அரிசி மூட்டையில், பருப்பு போட்டு வைத்திருக்கும் டப்பாவில், மாவு வகைகள் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் அதில் பூச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வராதாம். இதனால்தான் அந்த காலத்திலேயே தேங்காய் நாரை எடுத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினார்களோ?

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin