வாரா வாரம் பூஜை சாமான் தேய்க்கிறதே பெரிய வேலையா இருக்கும். பீதாம்பரி போட்டு தேய்த்தாலும் அந்த அளவிற்கு நமக்கு திருப்தியாக இருப்பதில்லை. அதற்காக அழுத்தி அழுத்தி தேய்க்க வேண்டியதாக இருக்கும். அப்படியே நாம் தேய்த்து வைத்தாலும் சீக்கிரமாகவே அதன் பல பளபளப்பு தன்மையை இழந்து விடும். ஆனா இந்த முறையில் நீங்கள் பூஜை சாமான்களை தேய்த்தால் எந்த சிரமமும் இல்லாமல், எதையும் போட்டுக் கொதிக்க வைக்காமல் ஒரு மாதம் வரை புதுசு போலவே உங்கள் பூஜை அறையில் பூஜை சாமான்கள் மின்னிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலர் தண்ணீரில் புளியை போட்டு, அல்லது குக்கரில் புளியை போட்டு பூஜை சாமான்களையும் சேர்த்து கொதிக்க விடுவார்கள். அது போல் எல்லாம் எந்த தொல்லை பிடித்த வேலையும் இல்லாமல் மிக சுலபமாக உங்கள் பூஜை சாமான்களை நீங்கள் பளிச்சென்று ஜொலிக்க வைக்க முடியும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முதலில் உங்கள் பூஜை பாத்திரங்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அவை எல்லாம் மூழ்கும்படி ஒரு டப்பில் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா போட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் நிறைய பூஜை சாமான்கள் இருந்தால் அதற்கேற்ப பேக்கிங் சோடாவின் அளவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் சின்தடிக் வினிகர்(synthetic vinegar) ஒரு மூடி சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக 6, 7 பூஜை பாத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும். அதற்கு மேல் நிறைய வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் புளி, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஈடாக இருக்கும் இந்த சின்தடிக் வினிகர். இது உங்களுக்கு ஆன்லைன் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். விலையும் குறைவு தான். 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இரண்டும் தண்ணீரில் கலந்ததும் உங்கள் பூஜை சாமான்களை எண்ணெய் மட்டும் துடைத்து விட்டு அப்படியே போட்டு விடுங்கள். நீங்கள் மஞ்சள் குங்குமத்தை கூட நீக்கத் தேவையில்லை. ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்து சபீனா அல்லது பீதாம்பரி பவுடர் கொண்டு சாதாரணமாக நீங்கள் தேய்த்தாலே போதும், புத்தம் புதிய பித்தளை பாத்திரம் போல் ஜொலிக்கும். இதற்காக நீங்கள் போட்டு அழுத்தம் கொடுக்க தேவையில்லை. லேசாக தேய்த்தாலே போதும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin