உங்களுக்கு பிபி, சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

தற்போது ஏராளமான டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் நமது இணையமானது டயட்டுகளளால் நிரம்பியுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் சிறந்தவை என்றும் கூறப்படுகின்றன. இவ்வாறு கூறப்படுவதால் எந்த டயட்டை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். அதிலும் குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள், எந்த டயட்டைப் பின்பற்றுவது என்று தெரியாமல் இருப்பார்கள். ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்து, அதற்கு அன்றாடம் மருந்துகளை எடுத்து வருபவர்கள், தங்களின் உணவில் எந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் உடல்நல பிரச்சனை இன்னும் சிக்கலாகிவிடும். இதற்காகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கான சிறப்பான டயட் எதுவென்று கொடுத்துள்ளது. அந்த டயட் எதுவென்று தெரிந்து கொண்டு, அதை பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் (தைராய்டு அல்லது பி.சி.ஓ.எஸ் பிரச்சனை)

ஹார்மோன் பிரச்சனைகளான தைராய்டு பிரச்சனை அல்லது பி.சி.ஓ.எஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள், இடைப்பட்ட விரதத்தை (Intermittent Fasting) அதுவும் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே முயற்சிக்க வேண்டும். இந்த வகை விரதம் ஒருவரின் கார்டிசோலின் அளவு, அதாவது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது ஹார்மோன் பிரச்சனைகளில் குறுகிய கால எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆகவே தைராய்டு அல்லது பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ளவர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இடைப்பட்ட விரதத்தை பின்பற்றுவது நல்லது.

சர்க்கரை நோய் அல்லது இன்சுலின் எடுப்பவர்கள்

டைப்-2 சர்க்கரை நோய் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது. ஆகவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாச்சுடேட்டட் கொழுப்பு அதிகம் நிறைந்த டயட்டைப் பின்பற்றக்கூடாது. மாறாக இவர்கள் கீட்டோஜெனிக் டயட்டைப் பின்பற்றுவது நல்லது. ஆனால் இந்த வகை டயட்டைப் பின்பற்றுவது சற்று கடினமாகத் தான் இருக்கும். மேலும் ப்ரீ-டயாபெட்டிக் கட்டத்தில் உள்ளவர்கள் இடைப்பட்ட விரதத்தை மேற்கொள்வது, உடலில் மாயங்களை உண்டாக்கும்.

புற்றுநோய் உள்ளவர்கள் அல்லது குடும்ப வரலாறு கொண்டவர்கள்

புற்றுநோய் இருப்பவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் உயர் புரோட்டீன் டயட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த டயட் புற்றுநோயைத் தூண்டும் IGF-1 ஹார்மோன் அளவை அதிகரிக்கும். மேலும் அதிக பளுத் தூக்கும் மக்கள் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட புரோட்டீனை அதிகமாக உட்கொண்டால், அது புற்றுநோயின் திறனை அதிகரிக்கும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்

இதய நோய் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் கீட்டோஜெனிக் டயட்டைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை டயட்டில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உயர் கொலஸ்ட்ராலின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இதய நோயையும் உண்டாக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், நீங்கள் உண்ணும் உப்பின் அளவை விட உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் தரம் மற்றும் அளவைக் கவனிப்பது முக்கியம். மொத்தத்தில் குறைந்த கார்போஹைட்ரேட் டயட் தான் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஒரு நல்ல வழி.

18 வயதிற்கும் குறைவானவர்கள் அல்லது கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் மற்றும் வளரும் குழந்தைகள் கீட்டோ டயட்டை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட் தான் மூளை, வளர்ச்சி மற்றும் பிற செயல்பாடுகளுக்கு எரிபொருளாக செயல்படுகிறது. இது குழந்தைகளின் வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும் இது வளர்ச்சியில் தாமதம், நடத்தை மாற்றங்கள் மற்றும் கருப்பையில் வளரும் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாட்டையுட் ஏற்படுத்தும்.