வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும், நாம் செய்யக்கூடிய தவறுகள் நம்மை பாதிக்காமல் இருக்க முன்கூட்டியே நாம் என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை செய்து விட்டால் நாம் தவறுகள் செய்யலாம். அந்த தவறுகள் மன்னிக்கப்படும் என்று சொல்ல வரவில்லை. அறியாமல் செய்யக்கூடிய தவறுகளாக இருந்தால், அந்த தவறுகளுக்கான தண்டனை முழுமையாக நம்மை வந்து சேராது, ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறைவதற்கு என்னென்ன செய்யலாம்? முதலில் நிறைய பேர் வீடுகளில் பீரோவை தரையில் வைக்கும் பழக்கம் இருக்கும். பீரோவை நேரடியாக தரையில் வைக்காமல், பீரோ வைப்பதற்கு ஸ்டாண்டுகள் இப்போது நிறையவே இருக்கின்றது.

அந்த ஸ்டாண்டில் பீரோ வைக்கலாம். அப்படி இல்லை என்றால் அந்த பீரோவுக்கு அடியில் சிறிதளவு மஞ்சளை தடவி விட்டு, அதற்குப் பின்பு பீரோவை வைக்க வேண்டும். பீரோ வைக்கும் ஸ்டாண்டின் மேலும் கொஞ்சமாக மஞ்சள் தடவி வைப்பதும் நல்லது. அதாவது பீரோவை எப்படி வைத்திருந்தாலும், பீரோ கால்களுக்கு அடியில் மஞ்சள் இருக்க வேண்டும் அவ்வளவுதான். இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய சின்ன சின்ன பணக் கஷ்டங்கள் கூட வராமல் இருக்கும். பணவரவு தங்குதடையின்றி உங்கள் கைகளில் கட்டாயம் இருக்கும்.

கொஞ்சமாக மாதுளை இலைகளையும், வில்வ இலைகளையும் சேர்த்து உங்கள் பீரோவுக்குள், பணம் வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இலை காய்ந்தாலும் தோஷமில்லை. தேவையற்ற தோஷங்கள் உங்களுக்கு இருந்தாலும், உங்கள் கைகளுக்கு வரக்கூடிய பணத்தில் இருந்தாலும் கூட, அந்த தோஷங்கள் நிவர்த்தி அடைய இந்த பரிகாரம் சிறந்தது. உங்களால் முடிந்தால் திருநங்கைகள் கையில் இருந்து ஒரே ஒரு ரூபாயை வாங்கி வந்து பீரோவில் வைக்கலாம். அது நமக்கு பெரிய அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவர்கள் கையால் அடுத்தவர்களுக்கு காசு கொடுக்க மாட்டார்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் மனநிறைவோடு, ஆசீர்வாதத்தோடு அவர்கள் கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை பெறுவது நமக்கு நல்லது.

By admin