மாலை வேளையில் நல்ல சுவையான ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையாக உள்ளதா? என்ன செய்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இனிப்பாக சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் ரவா இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான பணியாரம் செய்து கொடுங்கள். இந்த பணியாரம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ரவா பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் தயார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin