கருப்பா இருப்பதை விட வெள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகிறார்கள். இயற்கையாக கிடைத்த நிறத்தை மாற்ற முடியாது என்றாலும் இருக்கும் நிறம் வெயில், முறை யான பராமரிப்பு இல்லாததால் உடலில் இருக்கும் நிறத்திலும் மாறுபாடு இருக்கவே செய்கிறது. சிலருக்கு முகம் மற்றும் களையிழந்து நிறம் மாறி உடல் நல்ல நிறமாக இருக்கும். இவர்கள் உடல் நிறத்தை முகத்திலும் கொண்டு வரமுடியும். உடலின் ஒட்டுமொத்த சருமமும் ஒரே மாதிரியான நிறத்தில் வருவதற்கு என்ன செய்யலாம் பார்க்கலாமா? இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குங்குமப்பூ தெரியாதவர்கள் உண்டா என்ன? காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் பொருள். மருத்துவகுணமும் அழகு குணமும் நிறைந்த குங்குமப்பூவில் அதிகப்படியான இரும்புச்சத்தும், ஆன் டி ஆக்சிடென்ட்டும் நிறைந்திருக்கிறது. கர்ப்பிணிகள் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை செக்க சிவப்பாக பிறக்கும் என்ற எண்ணம் இன்றுவரை நம்மிடையே உண்டு.
விலை அதிகம் என்றாலும் குங்குமப்பூவை கர்ப்பக்காலத்தில் பயன்படுத்துபவர்கள் உண்டு. அதே போன்று அழகு பராமரிப்புக்காக கவனம் செலுத்தும் பெண்களின் பட்டியலிலும் குங்குமப்பூவுக்கு தனி இடம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்
ஒவ்வொருவருக்கும் நிறம் என்பது பிறக்கும்போதே உண்டாவதுதான். இயற்கையாக கிடைக்கும் நிறத்தை மாற்ற முடியாது என்பதே உண்மை. கோதுமை நிறம், மாநிறம், கருப்பு நிறம், சிவப்பு நிறம், வெள்ளை நிறம் என்று நாமே நிறங்களை வகைப்படுத்தி யிருக்கிறோம். கர்ப்பக்காலத்தில் உண்ணும் உணவு முறைகள், மாத்திரைகளால் குழந்தைக்கு நிறம் மங்கிவிடு வதாக நினைப்பதும் அதற்கு மாற்றாக குழந்தை சிவப்பாக பிறக்க அதிகப்படியான குங்குமப்பூ கொடுப்பதும் தவறானது ஏனெனில் இயற்கை நிறத்தை மாற்றி கொடுக்க குங்குமப்பூவால் முடியாது. அப்படியானால் குங்குமப்பூ சருமத்துக்கு பயன்தருமா? தராதா என்கிறீர்களா?
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .