எதில் எல்லாம் விழிப்புணர்வு எதிகம் தேவையோ, அதில் எல்லாம் தான் நாம் சுத்தமாக விழிப்புணர்வின்றி இருப்போம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், ஆணுறை, நாப்கின் போன்ற உடல்நலன் சார்ந்த பொருட்கள். அசிங்க, அசிங்கமாக கொச்சை வார்த்தைகளில் திட்டுவதற்கு கூட கூச்சப்படாதவர்கள் ஆணுறை மற்றும் நாப்கின் பற்றி பேச கூனிக்குறுகுவார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பெண்கள் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு இல்லாதலால் எவ்வளவு பிரச்சனைகள் சந்திக்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா? சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கின்னை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதானால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம்…

மாதவிடாய் காலங்களில், ஒருவேளை அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டால், ஒரே நாப்கினை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. இது நிறைய சரும பிரச்சனைகளை உண்டாக்கும். சரும தடுப்புகள், அரிப்பு, சிறுநீர் பாதை நோய் தொற்று, புணர்புழை இடங்களில் தொற்று போன்றவை ஏற்படும். நாப்கினை உபயோகப்படுத்தும் போது பிறப்புறுப்பு இடத்தில் ஈரம் இல்லாமல் நன்குதுடைத்த பிறகு பயன்படுத்துங்கள்.

மாதவிடாய் காலங்களில் உங்கள் பிறப்புறுப்பை சோப்பு பயன்படுத்தி கழுவாமல், வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி கழுவுவது தான் சரியான முறை என்று கூறப்படுகிறது. ஏனெனில், சோப்பு கிருமிகளை கொன்றாலும், தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் உங்கள் பிறப்புறுப்பிலிருந்து ஆசன பகுதி முறையில் கழுவுவது தான் சரியான முறை. (முன் இருந்து பின்). இதற்கு எதிர் திசையில் கழுவும் போது சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin