உலர்ந்த திராட்சைகளை நாம் பாயாசத்திற்கும் கேசரிக்கும்தான் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அடிப்படையில் அது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. அவை வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோ நியூட்ரின்கள், பாலிபினால்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சத்துகள் அனைத்தும் நம் நல் வாழ்விற்கும் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அது எவ்வாறு உடலுக்கு உதவுகிறது. அதன் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். உடலில் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய பகுதி என்றால் அது செரிமான பகுதிதான். ஏனெனில் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் இவைதான் உற்பத்தி செய்கின்றன. இதனால் எப்போதும் நீங்கள் உங்கள் செரிமான பாதையை சரியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு திராட்சை உதவி செய்யும்.

திராட்சை இயற்கையாகவே செரிமான சக்தி கொண்டு காணப்படுகிறது. இது குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும் நமது உடலில் இருந்து சீராக மலம் வெளியாக இது உதவிப்புரிகிறது. திராட்சை மலச்சிக்கல், வயிற்று வலி, குடலில் எரிச்சல், வீக்கம் மற்றும் வாய்வு போன்ற இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் உடல் எடையை குறைப்பது பற்றி மட்டுமே சிந்திப்பது கிடையாது. சிலர் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது குறித்தும் சிந்திக்கின்றனர். அப்படி சிந்திப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கு திராட்சை உதவி செய்யும்.

நீங்கள் உடல் எடையை அதிகரிக்க திராட்சை உஙகளுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். திராடசையில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும். உங்கள் உடலில் மோசமான கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடை அதிகரிக்க இது உதவி செய்யும். திராட்சையில் உள்ள கேடசின்கள் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களான பாலிபினாலை உற்பத்தி செய்கின்றன. இவை புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியக்கூறை குறைக்கின்றன. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வாக இந்த திராட்சை இருக்கிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin