அடுப்பில் உலையை வைத்து, அந்த தண்ணீரை சூடானதும் அரிசியைக் கழுவி, உலையில் போட்டு கிளறி பக்குவம் பார்த்து வடித்த காலமெல்லாம் வேறு. இப்போது பிரஷர் குக்கர் வந்துவிட்டது. அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்தோம் என்றால் சுடச்சுட சாதம் உடனடியாக தயாராகி விடும். ஆனால் வடித்த சாதத்திற்கும், குக்கரில் வைத்த சாதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. வடித்த சாதம் என்றால் பூ போல உதிரி உதிரியாக தொண்டையில் முழுவதற்கும் சாஃப்டாக இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சு வடித்த சாதம் தான் ஒரு வகையில் உடலுக்கு ஆரோக்கியமும் கூட. குக்கரில் வைத்த சாதம் சில பேர் வீட்டில் நரம்பு போல், வேகாத பக்குவத்தில் இருக்கும். சாதம் வெறச்சிடுச்சு அப்படின்னு சொல்வாங்க இல்லையா? குக்கரில் வடித்த சாதத்தை சில பேர் வீட்டில் ஆறிய பின்பு சாப்பிடவே முடியாது. தொண்டையில் அடைக்கும். சரி, குக்கரில் வைத்த சாதமும் பூ போல இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் இருக்கும் சாப்பாட்டு அரிசி அதாவது புழுங்கல் அரிசியை 1 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை தண்ணீர் ஊற்றி முதலிலேயே 3 முறை சுத்தமாக கழுவிவிட வேண்டும். எப்போதுமே அரிசி கழுவும் போது தண்ணீர் ஊற்றி விரல்களால் நிமிட கழுவ வேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது அரிசியில் முதல் முறை தண்ணீரை ஊற்றி கழுவி விட்டு, தண்ணீரை வடித்துவிட வேண்டும். இரண்டாவதாக தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு, அரிசியை உங்களது கைகளால் நிமிடி விட்டு அதன் பின்பு தண்ணீர் ஊற்றி கழுவி வைக்க வேண்டும். அடுத்ததாக மூன்றாவது முறை ஒரு முறை அரிசியை கழுவி விடுங்கள்.

இப்போது, இந்த 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். எந்த டம்ளரில் அரிசியை அளந்து எடுத்தீர்களா அதே டம்ளரில் தண்ணீர் ஊற்ற வேண்டும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பின்பு அரிசி 45 நிமிடங்கள் வரை ஊற வேண்டும். ஊறிய பின்பு அந்த அரிசியில் ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி, கொள்ளுங்கள். அதன்பின்பு பிரஷர் குக்கர் மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு பிரஷர் வெளியே வர ஆரம்பித்ததும் விசில் போடுங்கள்.

உங்களுடைய அரிசி பழைய அரிசியாக இருந்தால், 1 கப் அரிசிக்கு 3 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். ஒருவேளை உங்களுடைய அரிசி புது அரிசி ஆக இருக்கும் பட்சத்தில், அரை டம்ளர் அளவு தண்ணீரை குறைத்துக்கொள்ளலாம். கடைக்காரரிடம் கேட்டாலே சொல்லிவிடுவார்கள். நீங்கள் வாங்கும் அரிசி பழைய அரிசியா? புது அரிசியா என்பது. புதிய அரசு சீக்கிரத்தில் குழைந்து போகும். உபரி குறைவாகும். பழைய அரிசி நன்றாக வேகும். உபரி அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடிச்சிருந்தா இதையே ஃபாலோ பண்ணுங்க.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin