தயவுசெய்து முட்டை 🥚🥚தோலை தூக்கிப் போடாதீங்க இதை கொஞ்சம் பாருங்க அசந்து போயிடுவீங்க!!

நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் முட்டை தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வீணாக முட்டை தோலை குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டாம் அதை வைத்து பல்வேறு செயல்களைச் செய்யலாம்.முதலில் முட்டை தோலை வெயிலில் காய வைக்க வேண்டும் காய்த பிறகு வீட்டில் சரியாக வெட்டாத கத்தரிக்கோல் கத்தி ஆகியவை இருந்தால் முட்டையின் தோலை எடுத்து நறுக்கினாலே போதும் அவ்வாறு செய்தால் வீட்டில் உள்ள அந்த பொருட்கள் மிகவும் கூற்மையாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் நமது வீட்டிலுள்ள மிக்ஸி ஜார் களின்
அந்த பிளேட் கூர்மை இழந்துவிட்டால் சரியாக அரைக்காமல் இருக்கும் அதிலும் இந்த காய வைத்த முட்டை தோலை போட்டு அதில் வாஷிங் லிக்யூட் சிறிதளவு சேர்த்து முட்டை தோல் முழுகும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 2 நிமிடம் ஓட்டினால் போதும்.

மிகவும் கூர்மையாக மாறிவிடும் அது மட்டும் இன்றி கரை எல்லாம் போய் மிக்ஸி ஜார் பளபளவென ஜொலிக்கும்.அந்த கழிவுகளை நாம் வீணாக்காமல் அதை வீட்டில் வளர்க்கும் செடி மரம் போன்றவற்றில் ஊற்றினால் அது உரமாக செயல்படும். வீட்டில் எறும்பு மற்றும் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருந்தால் முட்டை தோலை அரைத்து அதில் பேக்கிங் சோடா கலந்து எங்கெல்லாம் பூச்சிகள் அதிகமாக வருகிறதோ அந்த இடத்தில் கொட்டி வைத்தால் போதும் நம் வீட்டில் பூச்சி என்பதே இல்லாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல் நமது வீட்டில் கண்ணாடி டம்ளர்கள் மற்றும் ஜாடிகள் எல்லாம் வைத்திருப்போம் அதில் என்னை போன்று பல பொருட்களை உபயோகித்து வருவோம் அது எவ்வளவு கழிவினாலும் சற்று கரையாக இருப்பது போல காட்சியளிக்கும்.

அதிலும் இந்த முட்டை தோலை தேய்த்துக் கழுவினால் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் கண்ணாடி புதுசு போல ஜொலிக்கும். அதேபோல் நமது வீட்டில் உள்ள டைல்ஸ்கள் இடுக்கில் கரைகள் அதிகமாக தங்கியிருக்கும் அதிலும் பல் விளக்கும் டூத் பிரஷை வைத்து முட்டை தோலை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து வந்தால் அந்தக் கரை உடனே நீங்கும்.வீட்டு பாத்திரத்தில் சிலநேரங்களில் என்னை பொருள் அடி பிடித்து விடும் அது கரையாக பாத்திரத்தை பிடித்துக்கொள்ளும் அதிலும் இந்த முட்டை தோலை வைத்து தேய்த்து எடுத்தால் மிகவும் எளிமையாக அந்த கரை சுத்தம் செய்யப்படும் எனவே முட்டை தோலை வீணாக்காமல் நாம் இவ்வளவு வேலைகளை எளிதாக செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் பகிருங்கள் நண்பர்களே.

நாம் இதுபோல் தினம்தோறும் தேவையில்லை என்று பல பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்டு வருகிறோம் ஆனால் அதிலும் பல நன்மைகள் நமக்கு உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். முட்டை நம் வாழ்வில் தினமும் அன்றாட உணவில் இடம் பெற கூடியதாக மாறி விட்டது அதனால் அதிக பட்சம் முட்டை தோலை வீணாக்காமல் அதை வைத்து இதுபோல் பல பயன்பாடுகளுக்கு நாம் பயன்படுத்தலாம் இதனை உபயோகித்து பார்தால் நண்மை நிச்சயம்.